வாழைச்சேனையில் போதைப்பொருட்களுடன் இரு பெண்கள் கைது
வாழைச்சேனையில் போதைப்பொருட்களுடன் இரு பெண்கள் இன்று கைது செய்யப்பட்டுள்ளனர்.
சம்பவம் தொடர்பில் பிறைந்துறைச்சேனை பன்சால வீதியைச் சேர்ந்த 36, 45 வயதுடைய இருவரே கைது செய்யப்பட்டுள்ளனர். வாழைச்சேனை இராணுவப் புலனாய்வுப் பிரிவினருக்குக் கிடைத்த இரகசிய தகவலுக்கமைய மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போது இராணுவத்தினரும், பொலிஸாரும் இணைந்து சந்தேகநபர்களை கைது செய்துள்ளனர்.
கைது செய்யப்பட்ட ஒரு பெண்ணிடமிருந்து 500 மில்லி கிராம் ஹெரோயின், 550 மில்லி கிராம் கேரளா கஞ்சா, மற்றும் 60 போதை மாத்திரைகளும் மற்றைய பெண்ணிடமிருந்து 17.33 கிராம் கேரளா கஞ்சாவும், 25 போதை மாத்திரைகளும் கைப்பற்றப்பட்டுள்ளன.
கைது செய்யப்பட்ட இரு பெண்களையும் வாழைச்சேனை நீதிமன்றில் ஆஜர்படுத்த வாழைச்சேனை பொலிஸார் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
வளைகுடாப் போரில் அமெரிக்க அரசியலமைப்பின் தாக்கம்..! 11 மணி நேரம் முன்
விஜய் டிவியில் புதிதாக வரும் 'தாய் மாமன்' சீரியல்.. ஒளிபரப்பாகும் நேரம், நாள் தெரியுமா.. இதோ வீடியோ Cineulagam
சொந்த ராசியில் சுக்கிரன் பெயர்ச்சி : இந்த 3 ராசிகளின் வாழ்க்கையில் அதிர்ஷ்ட கதவு திறந்தாச்சி! Manithan
12 மாதங்களின் பின் மேஷத்தில் உருவாகும் புதாதித்ய ராஜயோகம்: இந்த ராசியினருக்கு பொற்காலம் ஆரம்பம் Manithan