யாழ். தேர்த் திருவிழாவில் தாலி திருட்டு - கொழும்பை சேர்ந்த பெண்கள் கைது
யாழில் ஆலய தேர்த் திருவிழாவில் நகைத் திருட்டில் ஈடுபட்ட இரண்டு பெண்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கன்னாதிட்டி காளி அம்பாள் ஆலய தேர்த் திருவிழா இன்று (23.2.2024) காலை இடம்பெற்ற போதே குறித்த திருட்டு சம்பவம் இடம்பெற்றுள்ளது.
பெருமளவான பக்தர்கள் கூடியிருந்ததை சாதகமாக பயன்படுத்தி திருட்டில் ஈடுபட்ட கொழும்பு - கொச்சிக்கடை பகுதியைச் சேர்ந்த இரண்டு பெண்களே இவ்வாறு கைது செய்யப்பட்டனர்.
பொலிஸார் நடவடிக்கை
யாழ்ப்பாண பிராந்திய சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர் ஜகத் விசாந்தவின் கீழ் இயங்கும் குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் இருவரும் 15 நிமிடத்தில் கைது செய்யப்பட்டுள்ளனர்.

சந்தேக நபர்களிடம் இருந்து நான்கரை பவுண் தாலி பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளது.
விசாரணைகளின் பின்னர் இருவரையும் யாழ்ப்பாணம் நீதவான் நீதிமன்றத்தில் முற்படுத்த பொலிஸார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
தமிழன் பட பாணியில் நடைபெற்ற சம்பவம் - தமிழக அரசின் கடனை அடைக்க பணம் வழங்கிய வழக்கறிஞர் News Lankasri
புதன் - சுக்கிரன் உருவாக்கும் லட்சுமி நாராயண ராஜயோகம் : இந்த 3 ராசிகளுக்கு டபுள் ஜாப்பாட் உறுதி! Manithan
ரிஷபத்தில் செவ்வாய் பெயர்ச்சி: ஜூன் 21 முதல் இந்த 3 ராசிகளுக்கு நிதி நிலையில் அசுர வளர்ச்சி தான்! Manithan
ஹீரோவாக என்ட்ரி கொடுக்கும் இயக்குனர் ஷங்கர் மகன் அர்ஜித்... நாயகி, பட பெயருடன் வெளியான போட்டோ Cineulagam