இலங்கை வந்தடைந்த ஜப்பானிய போர் கப்பல்கள்!
ஜப்பான் கடற்படையின் பாரிய போர்க்கப்பல்கள் மூன்று இன்று நாட்டை வந்தடைந்துள்ளன.
நாசக்காரி, முரசாமே மற்றும் புயுசுக்கி ஆகிய போர்க்கப்பல்களே கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்தன.
பசுபிக் வலயத்தில் உள்ள ஏனைய நாடுகளுடன் இரு தரப்பு பயிற்சி நடவடிக்கைகளில் ஈடுபட்டதை அடுத்து குறித்த கப்பல்கள் நாட்டிற்கு வருகைதந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
தளபதி ஓ.எஸ்.இ கொய்சிரோவின் கட்டளையின் கீழ் FUYUZUKI (புயுசுக்கி) கப்பல் 151 மீட்டர் நீளம் கொண்டது. அதில் 220 உறுப்பினர்கள் பயணிக்கின்றனர்.
எரிபொருள் நிரப்பும் நோக்கத்தில் கொழும்புக்கு வந்துள்ள இந்த கப்பல் நாளை இலங்கையை விட்டு புறப்படவுள்ளது.
ககா என்பது 248 மீட்டர் நீளமான கப்பலாகும். கட்டளை அதிகாரியான கெப்டன் நிஷிதா சடோஷியின் கீழ் 210 உறுப்பினர்கள் அதில் உள்ளனர்.
MURASAME (முரசாமே) என்பது 151 மீ நீளமுள்ள கப்பல் ஆகும், இதில் 200 பணியாளர்கள் உள்ளனர். இந்தக் கப்பலுக்கு கேப்டன் காஷிவாகி யூச்சிரோ கட்டளையிடுகின்றார்.
அவுஸ்திரேலியாவிலிருந்து கொழும்புக்கு வந்துள்ள இந்த இரண்டு கப்பல்களும் இலங்கை கடற்படையுடன் இணைந்து ‘JA-LAN EX’ (லா -லன் எக்ஸ்) என்ற கூட்டு கடற்படை பயிற்சியில் பங்கேற்கவுள்ளன.
இதனையடுத்து, அக்டோபர் 04 ஆம் திகதி கொழும்பில் இருந்து இந்த இரண்டு கப்பல்களும் புறப்படவுள்ளன.