யாழில் பெண் ஒருவருக்கு ஒரே தடவையில் ஏற்றப்பட்ட இரண்டு தடுப்பூசிகள்!
யாழில் தடுப்பு ஊசி ஏற்றுவதற்காக சென்ற வயோதிபப் பெண்ணிற்கு ஒரே தடவையில் இரண்டு தடுப்பூசிகளும் ஏற்றியதால் அங்கு பரபரப்பான நிலை காணப்பட்டது.
யாழில் 30 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் தடுப்பூசி தேடும் பணிகள் இன்று ஆரம்பமாகியுள்ளன.
இந்த நிலையில் யாழ். பிரதேச செயலாளர் பிரிவிற்குட்பட்ட பரியோவான் கல்லூரி நிலையத்தில் அமைந்துள்ள தடுப்பூசி ஏற்றும் நிலையத்திற்கு சென்ற பெண்ணிற்கே இவ்வாறு இரண்டு தடவைகள் தடுப்பூசி ஏற்றப்பட்டுள்ளன.
வசந்தபுரம் பகுதியைச் சேர்ந்த குறித்த பெண்மணி தடுப்பூசி போடுவதற்கான பதிவுகள் அனைத்தையும் முடித்துவிட்டு தடுப்பூசி போடுவதற்காக சென்றவேளை, அங்கிருந்த தாதி ஒருவர் அவருக்கு ஊசியை ஏற்றும்போது தொலைபேசி அழைப்பு வந்ததால் அவசரமாக ஊசி ஏற்றிவிட்டு சென்றுள்ளார்.
அதனை அறியாத மற்றொரு தாதி அவரது மற்றைய கையிலும் ஊசியை ஏற்றினர்.
எனினும் குறித்த பெண்மணி ஒரு மணித்தியாலம் தடுத்து வைக்கப்பட்டு அவருக்கான மருத்துவ ஆலோசனைகள் வழங்கிய பின்னரே வீட்டுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளார்.
நள்ளிரவில் மாயமான பல்கலைக்கழக மாணவர்... நான்கு வாரங்களுக்குப்பிறகு தெரிய வந்த அதிர்ச்சி சம்பவம் News Lankasri
தொழில் தொடங்குவதற்குள் குணசேகரன், ஜனனிக்கு ஏற்படுத்திய பெரிய பிரச்சனை... எதிர்நீச்சல் தொடர்கிறது பரபரப்பு புரொமோ Cineulagam