முச்சக்கர வண்டி சாரதி கத்தியால் குத்திக்கொலை: விசாரணையில் வெளியான காரணம்
குருந்துவத்தை - வார்ட் பிளேஸ் தேசிய பல் வைத்தியசாலைக்கு முன்பாக முச்சக்கர வண்டி சாரதி ஒருவர் கத்தியால் குத்திக்கொலை செய்யப்பட்டுள்ளதாக கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவு தெரிவித்துள்ளது
இந்த கொலையினை மேற்கொண்ட பின்னர் முச்சக்கரவண்டியுடன் தப்பிச்சென்ற சந்தேகநபர்கள் மூவரில் இருவர் திருடப்பட்ட முச்சக்கர வண்டியுடன் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இவ்வாறு கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் இருவரில் பிரதான சந்தேகநபரும் அடங்குவதாகவும், கொலைக்கு பயன்படுத்தப்பட்ட கூரிய கத்தி மற்றும் ஐஸ் போதைப்பொருள் என்பன பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளது.
பொலிஸார் விசாரணை
சந்தேகநபர்களிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் போது, கடந்த 23ஆம் திகதி நள்ளிரவில் கைப்பேசி ஒன்றை திருடுவதற்காக இந்த கொலை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.
கொடகவெல பகுதியில் வசிக்கும் 34 வயதுடைய நபரே இவ்வாறு கொல்லப்பட்டுள்ளார்.
சந்தேகநபர்கள் கைப்பேசியை திருடிவிட்டு தப்பிச் சென்றுள்ளதாகவும் மற்றைய சந்தேக நபரை கைது செய்வதற்கான விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |

உள்ளூராட்சிசபை தேர்தலும் தமிழ் தேசியமும் 8 மணி நேரம் முன்

பிடிவாதத்தின் மறு உருவமாகவே உலாவும் பெண் ராசியினர் இவர்கள் தானாம்... உங்க ராசியும் இதுல இருக்கா? Manithan

டூரிஸ்ட் பேமிலி படத்தின் மாபெரும் வெற்றி.. இயக்குநருடன் பணிபுரிய ஆர்வம் காட்டும் முன்னணி நடிகர்கள் Cineulagam
