மட்டக்களப்பில் சூட்சுமமான முறையில் கொள்ளையில் ஈடுபட்ட இருவர் கைது
மட்டக்களப்பு மாவட்டத்தின் பல இடங்களிலும் மிகவும் சூட்சுமமான முறையில் கொள்ளைச் சம்பவங்களில் ஈடுபட்டு வந்த சந்தேகநபர்களை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
இந்த கைது நடவடிக்கை நேற்றையதினம் (06.10.2023) மேற்கொள்ளப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
களுவாஞ்சிகுடி, வெல்லாவெளி, கொக்கட்டிச்சோலை, மாட்டக்களப்பு உள்ளிட்ட பல பொலிஸ் பிரிவுகளிலும் அண்மைக்காலமாக கொள்ளைச் சம்பவங்கள் இடம்பெறுவதாக மக்கள் முறைப்பாடு செய்துள்ளனர்.
பகுதிநேர வகுப்புக்களுக்குச் செல்லும் மாணவிகள், சந்தைக்குச் செல்லும் மக்கள், பொது வெளியில் நடமாடும் பெண்கள் அணிந்திருக்கும் தங்க நகைகளை சந்தேகநபர்கள் மிகவும் சூட்சூமமான முறையில் திருடியுள்ளதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
தங்க நகைகள் மீட்பு
இதனையடுத்து அக்கரைப்பற்று பிரதேசத்தைச் சேர்ந்த 22 மற்றும் 23 வயதுடைய இருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
அத்துடன் கொள்ளையடித்த தங்க நகைகளை அக்கறைப்பற்று பிரதேசத்திலுள் தங்க நகை விற்பனை நிலையம் ஒன்றில் விற்பனை செய்திருந்ததோடு அவை உருக்கப்பட்ட நிலையில் மீட்கப்பட்டுள்ளதாகவும் கொள்ளைச் சம்பவத்திற்குப் பயன்படுத்தியதாக கருதப்படும் மோட்டார் சைக்கிள் ஒன்றையும் பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.
மேலும் கைது செய்யப்பட்டவர்கள் களுவாஞ்சிகுடி நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப் படுத்தப்பட்டுள்ளதுடன் அவர்களை எதிர்வரும் 16 ஆம் திகதிவரையில விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

நேர்காணலில் ரணிலுக்கு பேச ஆலோசனை வழங்கியது அலி சப்ரியின் மகனா..! நாடாளுமன்றில் கொந்தளித்த சாணக்கியன்





நிலாவின் அப்பா சோழனிடம் போட்ட சவால், குடும்பம் உடைந்துவிடுமா.. அய்யனார் துணை சீரியல் புரொமோ Cineulagam

சண்டே ஸ்பெஷல்: இந்த வாரம் விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் சீரியல் எது தெரியுமா?.. வெளிவந்த புரொமோ Cineulagam
