கொழும்பில் பிறந்தநாள் விழாவில் பரபரப்பை ஏற்படுத்திய துப்பாக்கிச்சூடு! இந்தியாவில் சிக்கிய இருவர்
வத்தளையில் நடந்த துப்பாக்கிச்சூட்டு சம்பவத்துடன் தொடர்பு இருக்கலாம் என சந்தேகிக்கப்படும் இருவரை இராமேஸ்வரம் கடலோர காவல் குழும (மரைன்) பொலிஸார் கைது செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
இவ்வாறு கைது செய்யப்பட்டவர்கள் வத்தளையை சேர்ந்தவர்கள் என்றும் 30 மற்றும் 31 வயதுக்குட்பட்டவர்கள் என்றும் கூறப்படுகின்றது.
கடந்த வியாழக்கிழமை வத்தளையில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் இவர்களுக்கு தொடர்பு இருப்பதாக பொலிஸ் சந்தேகிப்பதாக இந்திய ஊடக அறிக்கைகள் தெரிவிக்கின்றன.
கடவுச்சீட்டின்றி சட்டவிரோதமாக ஊடுருவல்
இவர்கள் இருவரும் நேற்று முன்தினம் (23) இரவு மன்னார் பேசாலை கடற்கரையிலிருந்து ரூ.3 இலட்சம் பணம் கொடுத்து படகில் புறப்பட்டு, நேற்று (24) அதிகாலை சுமார் 4.00 மணியளவில் தனுஷ்கோடி கம்பிப்பாடு கடற்கரையை வந்தடைந்ததாக தெரிவித்துள்ளனர்.

கடவுச்சீட்டு இன்றிச் சட்டவிரோதமாக ஊடுருவியதற்காக இருவர் மீதும் வழக்குப்பதிவு செய்து புழல் சிறையில் அடைக்க மரைன் பொலிஸார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.
மேலும், இருவர் மீதும் இலங்கையில் போதைப்பொருள் தொடர்பான மூன்று வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகின்றது.
இதன் காரணமாக, இருவரையும் மீண்டும் இலங்கைக்கு திருப்பி அனுப்புவது குறித்து 'கியூ' பிரிவு பொலிஸார் உயர் அதிகாரிகளுடன் ஆலோசிக்கப்பட்டு வருகின்றது.
5 பொலிஸ் குழுக்கள் விசாரணை
இதேவேளை, வத்தளை, கதிரான பள்ளியவத்தை பகுதியில் நேற்று இரவு பிறந்த நாள் வரவேற்பு மண்டபமொன்றில் நடைபெற்ற விருந்தொன்றிற்குள் புகுந்த துப்பாக்கிதாரி ஒருவர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 39 வயதுடைய நபரொருவர் உயிரிழந்திருந்தார்.

இந்த சம்பவத்திற்கு உதவி புரிந்த குற்றச்சாட்டின் பேரில் இரு பெண்கள் உட்பட நால்வர் கைது செய்யப்பட்டுள்ளதாகப் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
போதைப்பொருள் கடத்தல்காரராகக் கருதப்படும் மட்டக்குளியைச் சேர்ந்த 'குடு ரொஷான்' என்பவரைக் இலக்கு வைத்தே இத்துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்ட போதிலும், இலக்குத் தவறியதால் அவருக்கு அருகில் இருந்தவர் துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகியுள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்துள்ளனர்.
மேலும், துப்பாக்கிச்சூட்டு சம்பவம் தொடர்பில் விசாரணைகளை மேற்கொள்வதற்காக 5 பொலிஸ் குழுக்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
கொழும்பில் பிறந்தநாள் விழாவில் பரபரப்பை ஏற்படுத்திய துப்பாக்கிச்சூடு - சிசிடிவி கமராக்களில் சிக்கிய சந்தேகநபர்
தாக்குதலைத் தீவிரப்படுத்தும் ஹவுதிகள்... சவுதி அராம்கோ எண்ணெய் நிலையம் மீது ஏவுகணை வீச்சு News Lankasri