மருத்துவத்துறையில் சாதனை படைத்த இரு மாணவிகள்
தற்போது வெளியாகியுள்ள பரீட்சையின் பிரகாரம் உயிரியல் விஞ்ஞான பிரிவில், கிண்ணியா முஸ்லிம் அல்ஹிரா முஸ்லிம் மகளிர் மகா வித்தியாலய மாணவிகள் இருவர் வரலாற்று சாதனை படைத்துள்ளனர்.
எம். என். மின்ஹா மாவட்ட மட்டத்தில் முதலாம் இடத்தையும், எம். ஏ. எப். இனாசிரின் மாவட்ட மட்டத்தில் ஆறாம் இடத்தையும் பெற்று இந்த சாதனையை நிலைநாட்டி மருத்துவத் துறைக்கு தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.
பத்து மாணவிகள் சித்தியடைந்திருந்தமை
இந்த பாடசாலைக்கு உயர்தரத்தில் விஞ்ஞான பிரிவுக்கான அனுமதி கிடைத்து முதல் தடவையிலே, குறித்த மாணவிகள் இந்த சாதனையை நிலைநாட்டி உள்ளனர்.

விஞ்ஞான பிரிவில், முதல் தடவையாக 13 மாணவிகள் இந்தப் பாடசாலையில் இருந்து தோற்றியிருந்த நிலையில், இதில் பத்து மாணவிகள் சித்தியடைந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
சோமாலிலாந்தை இஸ்ரேல் அங்கீகரித்தது ஏன்? 4 நாட்கள் முன்
Bigg Boss: Bigg Boss: உங்கள் பயணம் இத்துடன் முடிந்தது... ஒலித்த பிக்பாஸ் குரல்! வெளியேறிய போட்டியாளர்கள் Manithan