இரு நீர்த்தேக்கங்களின் வான் கதவுகள் திறப்பு..!
கடும் மழையுடனான வானிலை காரணமாக கண்டி (Kandy) - பொல்கொல்ல மகாவலி நீர்த்தேக்கத்தில் இரண்டு வான் கதவுகள் திறக்கப்பட்டுள்ளன.
நீர்த்தேக்கத்தின் இரண்டு வான் கதவுகளும் தலா ஒரு மீற்றர் அளவில் திறக்கப்பட்டுள்ளதாக இலங்கை மகாவலி அதிகார சபைக்கு பொறுப்பான பொறியியலாளர் தெரிவித்துள்ளார்.
தெதுரு ஓயா நீர்த்தேக்கம்
ஒரு வான்கதவில் இருந்து வினாடிக்கு சுமார் 140 கன மீற்றர் நீர், விக்டோரியா நீர்த்தேக்கத்திற்கு திறந்து விடப்படுவதாக இலங்கை மகாவலி அதிகார சபை தெரிவித்துள்ளது.
இதேபோல், தெதுருஓயா நீர்த்தேக்கத்தின் எட்டு வான் கதவுகளில் ஆறு இன்று (09) காலை திறக்கப்பட்டதாக நீர்த்தேக்க நீர்ப்பாசன பொறியியலாளர் கயான் வீரசூரிய தெரிவித்துள்ளார்.
திறக்கப்பட்ட ஆறு கதவுகளில், நான்கு கதவுகள் தலா 5 அடியும், இரண்டு கதவுகள் தலா 2 அடியும் திறக்கப்பட்டுள்ளது.
இதன்காரணமாக தெதுரு ஓயா நீர்த்தேக்கத்திலிருந்து வினாடிக்கு 16600 கன அடி வீதம் தண்ணீர் திறந்துவிடப்படுவதுடன் தெதுரு ஓயாவின் தாழ்வான பகுதிகளில் வசிக்கும் மக்கள் மற்றும் தெதுரு ஓயாவைச் சூழவுள்ள மக்கள் தொடர்பில் உரிய கவனம் செலுத்தப்படும் எனவும் பொறியியலாளர் குறிப்பிட்டுள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
நல்லூர் கந்தசுவாமி கோவில் 14 ஆம் நாள் மாலை திருவிழா





ஆசிய நாடொன்றிற்கு எலோன் மஸ்க் விடுத்த கடும் எச்சரிக்கை... 1 மில்லியன் மக்களை இழக்கலாம் News Lankasri

மகேஷுக்கு விபத்து.. ஆனந்தி பற்றிய உண்மை தெரிந்ததா? சிங்கப்பெண்ணே சீரியல் அடுத்த வார ப்ரோமோ Cineulagam

இந்தியா மீதான 50% வரி: இது அரசியலமைப்பிற்கு எதிரானது! அமெரிக்க பொருளாதார நிபுணர் எதிர்ப்பு News Lankasri

பாட்டியை காணவில்லை, க்ரிஷ் அம்மாவை கண்டுபிடிக்க மீனா சொன்ன விஷயம், சிக்கப்போகும் ரோஹினி... சிறகடிக்க ஆசை புரொமோ Cineulagam

உடல் உறையும் நிலையில் லொறிக்குள் சிக்கியிருந்த புலம்பெயர்ந்தோர்... சாரதியால் அம்பலமான கொடூரம் News Lankasri
