சஜித்திற்கு ஏற்பட்டுள்ள சிக்கல்! கட்சி உறுப்பினர் எடுத்துள்ள அதிரடி நடவடிக்கை
அமைச்சர் ஹரின் பெர்னாண்டோவுடன் இணைந்து தனது எதிர்கால அரசியல் செயற்பாடுகளை முன்னெடுத்துச் செல்ல உள்ளதாக ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் வடிவேல் சுரேஷ் தெரிவித்துள்ளார்.
ஹரின் பெர்னாண்டோவுடன் இணைந்து பதுளையில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
எதிர்கால அரசியல் செயற்பாடுகள்
இதேவேளை, கடந்த பொதுத் தேர்தலில் ஐக்கிய மக்கள் சக்தியின் கீழ் போட்டியிட்டு தோல்வியடைந்த முன்னாள் ஐக்கிய தேசிய கட்சியின் அமைச்சர் பீ.ஹரிசன், கட்சியின் உப தலைவர் பதவியில் இருந்தும், ஐக்கிய மக்கள் சக்தியில் இருந்து அனைத்து பதவிகளிலும் இருந்து விலகுவதாகவும் தெரிவித்துள்ளார்.
இதனடிப்படையில் ஐக்கிய மக்கள் சக்தியின் இரு உறுப்பினர்கள் எதிர்காலத்தில் ஐக்கிய தேசிய கட்சியில் இணைந்து செயற்படவுள்ளனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |