மட்டு. காத்தான்குடியில் வீட்டினை உடைத்து கொள்ளையிட்ட இருவர் கைது
மட்டக்களப்பு, காத்தான்குடி பகுதியில் வீடு உடைத்து 12 பவுண் தங்க ஆபரணங்கள் மற்றும் ஒரு இலட்சம் ரூபா பணத்தை கொள்ளையடித்துச் சென்ற கொள்ளையர்கள் தங்க ஆபரணங்களை நகைக்கடையில் விற்பனை செய்ய முற்பட்டபோது இன்று கைது செய்துள்ளதாக காத்தான்குடி பொலிஸார் தெரிவித்தனர்.
கடந்த வருடம் டிசம்பர் மாதம் 12 ம் திகதி இரவு காத்தான்குடி மீன்பிடி இலாகா வீதியிலுள்ள வீடு ஒன்றின் மலசலகூட கூரையை உடைத்து உள்நுழைந்து அலுமாரியில் இருந்த 12 இலட்சத்து 90 ஆயிரம் ரூபா பெறுமதியான 12 பவுண் தங்க ஆபரணங்கள் மற்றும் ஒரு இலட்சம் ரூபா பணத்தை கொள்ளையடித்துச் சென்றுள்ளனர்.
இதனையடுத்து தங்க ஆபரணங்களை கொள்ளை கொடுத்தவர் நேற்று முன்தினம் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு தெரிவித்ததையடுத்து குற்றத்தடுப்பு பிரிவு பொறுப்பதிகாரி வை.விஜயராஜா தலைமையிலான பொலிஸார் விசாரணையில் ஈடுபட்டனர்.
இந்த நிலையில் அக்கரைப்பற்றில் திருமணம் முடித்துள்ள காத்தான்குடியைச் சேர்ந்த ஒருவர் அக்கரைப்பற்று நகைக்கடை ஒன்றில் டொலர் எனப்படும் தங்க ஆபரணம் ஒன்றை விற்பனை செய்ய சென்றுள்ள நிலையில் நகைக்கடை உரிமையாளர் பொலிஸாருக்கு தகவல் ஒன்றை வழங்கியதையடுத்து பொலிஸார் குறித்த தங்க ஆபரணத்தை விற்பனை செய்ய சென்றவரை மடக்கிபிடித்து கைது செய்துள்ளனர்.
பின்னர் பொலிஸார் நடத்திய விசாரணையில் காத்தான்குடியில் உள்ள வீடு ஒன்றில் கொள்ளையிட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.
இதனையடுத்து கைது செய்யப்பட்டவருடன் கொள்ளையில் ஈடுபட்ட 25 வயதுடைய ஒருவரை காத்தான்குடியில் வைத்து கைது செய்ததையடுத்து கொள்ளையடிக்கப்பட்ட இருவரிடமிருந்து 6 பவுண் தங்க ஆபரணங்களை இதுவரை மீட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.
இதில் கைது செய்யப்பட்டவர்களை நீதிமன்றில் ஆஜர்படுத்த நடவடிக்கை
எடுக்கப்பட்டுள்ளதாகவும், இது தொடர்பான மேலதிக விசாரணைகளை காத்தான்குடி பொலிஸார் மேற்கொண்டுவருகின்றனர்.





சிந்தாமணியை வைத்து மீனாவை அழ வைக்க ரோஹினி போட்ட கேவலமான பிளான்... சிறகடிக்க ஆசை சீரியல் புரொமோ Cineulagam

Quartersகு செல்வதாக செந்தில் கூறிய விஷயம், பாண்டியனின் ஷாக்கிங் பதில்... பாண்டியன் ஸ்டோர்ஸ் பரபரப்பு புரொமோ Cineulagam

கரூர் உயிரிழப்பு சம்பவத்திற்கு அவர்தான் காரணம் - கடிதம் எழுதி வைத்து உயிரை மாய்த்த தவெக நிர்வாகி News Lankasri
