கொழும்பு மேகசின் சிறைச்சாலையில் பதற்றம் 2 கைதிகள் பலி: இரு அதிகாரிகள் கைது
கொழும்பு மேகசின் சிறைச்சாலையில் ஏற்பட்ட பதற்ற நிலையின் போது இரண்டு கைதிகள் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
போதைப்பொருள் தொடர்பான குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டு மேகசின் சிறைச்சாலையில் விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த இரண்டு சந்தேகநபர்கள் தப்பிச் செல்ல முயற்சித்தனர் என தெரிவிக்கப்புடுகின்றது.
சிறைச்சாலைத் திணைக்களம் வெளியிட்டுள்ள தகவல்களின்படி, நேற்று காலை 11 மணியளவில் குறித்த கைதிகள் இருவரும் சிறைச்சாலையிலிருந்து தப்பிச் செல்ல முயற்சித்துள்ளனர்.

இதன்போது கடமையிலிருந்த சிறைக்காவலர் ஒருவர் அவர்களைத் தடுக்க முற்பட்ட நிலையில் ஏற்பட்ட மோதலைத் தொடர்ந்து, சந்தேகநபர்கள் இருவரும் திடீரென மயங்கி விழுந்ததாகக் கூறப்படுகிறது.
இந்தச் சம்பவத்தின் போது ஒரு சந்தேகநபர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளதுடன், மற்றைய சந்தேகநபரும் சிறைக்காவலரும் காயமடைந்த நிலையில் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.
எனினும், அங்கு சிகிச்சைப் பெற்று வந்த நிலையில் இரண்டாவது சந்தேகநபரும் பின்னர் உயிரிழந்துள்ளார்.
அதேவேளை, காயமடைந்த சிறைக்காவலர் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகின்றார்.
எனினும், இந்த மரணங்கள் தொடர்பில் உயிரிழந்தவர்களின் உறவினர்கள் கடும் அதிருப்தியை வெளியிட்டுள்ளனர்.
குறித்த கைதிகள் சிறைச்சாலை அதிகாரிகளால் தாக்கப்பட்டிருக்கலாம் என அவர்கள் குற்றம் சுமத்துகின்றனர்.
இச்சம்பவம் குறித்து பொலிஸ் ஊடகப் பேச்சாளர் கருத்துத் தெரிவிக்கையில், இது தொடர்பான விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகக் குறிப்பிட்டார்.
உயிரிழப்புக்கான உண்மையான காரணம் மற்றும் சம்பவத்தின் பின்னணி குறித்து பொரள்ளை பொலிஸாரும் சிறைச்சாலைத் திணைக்களமும் இணைந்து தீவிர விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
இதேவேளை, இந்த சம்பவம் தொடர்பில் இரண்டு சிறைச்சாலை உத்தியோகத்தர்கள் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியல் புகழ் விசாலாட்சியா இது?... Frock போட்டு அவர் வெளியிட்ட போட்டோ Cineulagam
என் நாட்டைவிட்டு வெளியே போ... கனடாவில் இனவெறுப்புத் தாக்குதலுக்குள்ளான சீக்கிய முதியவர் News Lankasri