தன்னிச்சையாக பொலிஸாரிடம் சரணடைந்த இரு போராட்டக்காரர்கள்
அரசாங்கத்துக்கு எதிரான முன்னணி போராட்டக்காரர்கள் இரண்டு பேர் தாமாக முன்வந்து இன்று(22) பொலிஸாரிடம் சரணடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
ரதிந்து சேனாரத்ன
ரெட்டா என்ற பெயரில் பிரபலமான ரதிந்து சேனாரத்ன மற்றும் லஹிரு வீரசேகர ஆகிய இரண்டு போராட்டக்காரர்களுமே இவ்வாறு மருதானை பொலிஸ் நிலையத்தில் சரணடைந்துள்ளனர்.
இவர்கள் இருவரும் காலிமுகத்திடல் போராட்டக்களத்தில் முன்னணி செயற்பாட்டாளர்களாக அடையாளப்படுத்தப்படுவதாகவும் கூறப்படுகின்றது.
மோதல் சம்பவம்
கடந்த 09 மற்றும் 10ஆம் திகதிகளில் கோட்டை மற்றும் தலங்கம ஆகிய பகுதிகளில் இடம்பெற்ற மோதல் சம்பவங்கள் தொடர்பில் இருவரும் இன்னும் சிலரும் பொலிஸாரினால் தேடப்பட்டு வந்துள்ளனர்.
இந்நிலையில், இன்றைய தினம் இவர்கள் இருவரும் மருதானை பொலிஸ் நிலையத்தில் சரணடைந்துள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.





அநுரவின் கச்சதீவு பயணமும் மகாவம்ச மனநிலை 5 நாட்கள் முன்

ஒரு வார முடிவில் சிவகார்த்திகேயனின் மதராஸி திரைப்படம் செய்துள்ள வசூல்... மொத்தம் எவ்வளவு தெரியுமா? Cineulagam

வெளிநாட்டவர் வேலைவாய்ப்பிற்கு சிக்கல் - பிரித்தானியாவில் 2000 நிறுவனங்களின் விசா ஸ்பான்சர் உரிமங்கள் ரத்து News Lankasri
