கல்முனை பிரதான வீதியில் இரு தனியார் பேருந்துகள் ஒன்றுடனொன்று மோதி பாரிய சேதம்!
மட்டக்களப்பு, கல்முனை பிரதான வீதியில் ஆரையம்பதியில் இரண்டு தனியார் பேருந்துகள் ஒன்றுடன் ஒன்று மோதியதில் இரு பேருந்துகளிலும் பாரிய சேதம் ஏற்பட்டுள்ளதுடன், அரசாங்க கட்டடமொன்றிற்கும் பலத்த சேதம் ஏற்பட்டுள்ளது.
திங்கட்கிழமை (18) காலை 7 மணியளவில் கல்முனையிலிருந்து மட்டக்களப்பு நோக்கி வந்து கொண்டிருந்த தனியார் பேருந்து ஒன்று, ஆரையம்கதி கமநல சேவைகள் திணைக்கள அலுவலகத்திற்கு முன்னால் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மற்றுமொரு தனியார் பேருந்து மீது பின் பக்கமாக மோதியதில் இரு பேருந்து வண்டிகளிலும் பாரிய சேதம் ஏற்பட்டுள்ளதுடன் கமநல சேவைகள் திணைக்கள அலுவலகத்தின் மதில் மற்றும் பிரதான கதவுகள் உடைந்து சேதமடைந்துள்ளன.
பின்னால் வேகமாக வந்த பேருந்து வேறொரு வானை முந்திச் செல்ல முற்பட்டபோதே நிறுத்தியிருந்த பேருந்து வண்டி மீது மோதியதால் அந்த பேருந்து அலுவலக கட்டட மதிலில் மோதியுள்ளது.
சம்பவம் தொடர்பில் காத்தான்குடி பொலிசார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.









டிடி வாழ்க்கையில் விதி விளையாடிவிட்டது, மிகப்பெரிய வலி... எதிர்நீச்சல் சீரியல் ரேணுகா ஓபன் டாக் Cineulagam
ஏய் யாருடி நீ, அறிவுக்கரசியை வெளியே துரத்திய கதிர்... பரபரப்பு எபிசோட், எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியல் Cineulagam