சிறைக்கைதிகள் இருவர் தப்பியோட்டம்
அனுராதபுரம் திறந்தவெளி சிறைச்சாலையில் இருந்த இரு கைதிகள் தப்பிச் சென்றுள்ளதாக சிறைச்சாலை ஊடகப் பேச்சாளர் காமினி திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.
குறித்த சிறைச்சாலையின் சிற்றுண்டிச்சாலையில் பணியாற்றிய இரண்டு கைதிகளே இவ்வாறு இன்று (29) தப்பிச் சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
சிறைத்தண்டனை
தப்பிச் சென்றவர்களில் ஒருவர் அனுராதபுரம் கிரவஸ்திபுர பகுதியையும் மற்றைய கைதி களனிப் பகுதியையும் வசிப்பிடமாகக் கொண்டுள்ளனர்.

இந்நிலையில், கைது செய்யப்பட்டவர்களில் ஒருவருக்கு 02 மாத சிறைத்தண்டனையும் மற்றையவருக்கு 6 மாத சிறைத்தண்டனையும் விதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
மேலும், தப்பிச் சென்றுள்ள கைதிகளை கைது செய்யும் நடவடிக்கைகளை சிறைச்சாலை அதிகாரிகள் மற்றும் பொலிஸார் ஆரம்பித்துள்ளனர்.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
டிசம்பர் 6 இந்தியாவின் 4 நகரங்களில் குண்டு வெடிப்புக்கு திட்டம் - விசாரணையில் அதிர்ச்சி தகவல் News Lankasri
ரஜினி, கமல் படத்திலிருந்து சுந்தர் சி திடீர் விலகல்.. அதிர்ச்சியில் ரசிகர்கள்.. என்ன ஆச்சு Cineulagam