சோதனை குறித்து சமூக ஊடகங்களில் பதிவிட்ட இருவர் கைது
பொலிஸாரின் ரோந்து நடவடிக்கை, போதைப்பொருள் சோதனை, போக்குவரத்து ரோந்து நடவடிக்கை போன்றவற்றை வாட்ஸ்அப் சமூகவலைத்தளத்தின் ஊடாக குற்றவாளிகளுக்கு அறிவித்த இருவருக்கு விளக்கமறியல் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
மாத்தறை – தெய்ந்தர பிரதேசத்தை சேர்ந்த சந்தேகநபர்கள் இருவரை எதிர்வரும் 16 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு பிரதான நீதவான் திலின கமகே இன்று (14) உத்தரவிட்டுள்ளார்.
சம்பவம் தொடர்பில் 23 மற்றும் 30 வயதுடைய இருவர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.
பொலிஸார் மேலதிக விசாரணை
பொலிஸ் மா அதிபருக்குக் கிடைத்த தகவலின் பிரகாரம் குற்றப்புலனாய்வுப்பிரிவின் கணினி குற்றப்புலனாய்வுப் பிரிவினர் சந்தேகநபர்களை கைது செய்து நீதிமன்றில் முற்படுத்தியுள்ளனர்.
பெண் பொலிஸ் பரிசோதகர் நாடிகா திஸாநாயக்க, உப பொலிஸ் பரிசோதகர் இசுரு குணதிலக்க, சம்பத் பொலிஸ் கான்ஸ்டபிள்களான பிரதீப், கேஷான் மற்றும் ஆயேஷ் ஆகியோர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |