நடுவானில் நேருக்கு நேர் மோதிய விமானங்கள்! நால்வர் பலி
வடகிழக்கு ஸ்பெயினில் பார்சிலோனா நகரின் வடக்கே அமைந்துள்ள மோயா நகர விமான நிலையத்தின் அருகே இரு இலகுரக விமானங்கள் ஒன்றுடன் ஒன்று மோதி விபத்துக்குள்ளாகியுள்ளன.
விபத்தில் நால்வர் உயிரிழந்துள்ளனர் என தெரிவிக்கப்படுகின்றது.
தீப்பற்றி எரிந்த விமானம்
விமானங்கள் விபத்துக்குள்ளானதை நேரில் கண்ட ஒருவர் வழங்கிய தகவல்களுக்கு அமையவே மீட்பு பணியாளர்களினால் தேடுதல் பணிகள் முன்னெடுக்கப்பட்டது.
இதில் ஒரு விமானம் விமான நிலையத்தின் அருகே மரங்கள் நிறைந்த பகுதியில் விழுந்து தீப்பற்றியதாக தெரிவிக்கப்படுவதுடன், விமானத்தில் பயணித்த இருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளனர்.
அதன்பின்னர் நீண்ட தேடுதல் பணிக்கு பிறகு இரண்டாவது விமானத்தை கண்டுபிடித்ததுடன், அதில் பயணித்த இருவர் உயிரிழந்துள்ளனர்.
விசாரணை
இரண்டு விமானங்களும் நடுவானில் மோதிக் கொண்டதலே இவ்விபத்து இடம்பெற்றிருக்கலாம் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
மேலும் விபத்து தொடர்பாக தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.