மகிந்த சிறிவர்தனவுக்கு எதிரான இரண்டு மனுக்கள்! உயர்நீதிமன்றில் விசாரணை - செய்திகளின் தொகுப்பு
நிதியமைச்சின் செயலாளர் மகிந்த சிறிவர்தனவுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டுள்ள இரண்டு மனுக்கள் இன்று (30.03.2023) உயர்நீதிமன்றின் ஐவர் அடங்கிய நீதியரசர்கள் குழாம் முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படவுள்ளது.
இதன்படி, சிறிவர்தன நீதிமன்றத்தை அவமதித்ததாக குற்றம் சுமத்தப்பட்டுள்ள மனுக்கள், பிரதம நீதியரசர் ஜயந்த ஜயசூரிய மற்றும் நீதியரசர்களான புவனேக அலுவிஹாரே, பிரியந்த ஜயவர்தன, விஜித் மலல்கொட மற்றும் முர்து பெர்னாண்டோ ஆகியோர் முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளது.
ஐக்கிய மக்கள் சக்தியின் பொதுச் செயலாளர் ரஞ்சித் மத்தும பண்டார மற்றும் தேசிய
சுதந்திர முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர் விஜித ஹேரத் ஆகியோரால் கடந்த
மார்ச் மாதம் 21 ஆம் திகதி இரண்டு அவமதிப்பு மனுக்கள் தாக்கல்
செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
இது தொடர்பிலான முழுமையான செய்திகளை உள்ளடக்கி வருகின்றது இன்றைய நாளுக்கான மதியநேர செய்திகளின் தொகுப்பு,



