யாழில் சட்டவிரோத மரக்குற்றிகளை வைத்திருந்த இருவர் கைது
யாழ்ப்பாணம் (Jaffna) - மானிப்பாய் பகுதி வீடொன்றில் சட்டவிரோதமான முறையில் பாலை மற்றும் முதிரை குற்றிகளைப் பதுக்கி வைத்திருந்த குற்றச்சாட்டுடன் தொடர்புடைய இருவரை யாழ். மாவட்ட வனவள பாதுகாப்பு திணைக்களத்தினர் கைது செய்துள்ளனர்.
முல்லைத்தீவில் இருந்து மரக்குற்றிகள் வெட்டப்பட்டு வருவதாக வனவள பாதுகாப்பு திணைக்களத்துக்குக் கிடைத்த இரகசிய புலனாய்வு தகவலுக்கமைய இந்த கைது நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது.
குறித்த கைது நடவடிக்கையை வனவள பாதுகாப்பு திணைக்களத்தினருடன் இணைந்து விசேட அதிரடிப் படையினர் மேற்கொண்டுள்ளனர்.
மேலதிக விசாரணைகள்
இதன்போது, சந்தேகநபர்களிடம் இருந்து 30 முதிரை மரக்குற்றிகளும் 33 பாலை மர தீராந்திகளும் கைப்பற்றப்பட்டுள்ளன.
அத்துடன், கைது செய்யபட்ட சந்தேக நபர்களுக்கு எதிராக மல்லாகம் நீதிவான் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டு மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |





மீனா தான் பெஸ்ட், நீ பிச்சைக்கார குடும்பம், ரோஹினியை வெளுத்த விஜயா... சிறகடிக்க ஆசை அதிரடி எபிசோட் Cineulagam

ஹமாஸ் வசமிருந்த நான்கு பிணைக்கைதிகள் உடல்கள் மட்டுமே ஒப்படைப்பு: மீதமுள்ள உடல்கள் நிலை என்ன? News Lankasri

Furniture வாங்க பணம் எப்படி வந்தது, செந்தில் கூற கூற ஷாக்கான மீனா, கடைசியில்... பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 Cineulagam
