வவுனியாவில் இடம்பெற்ற விபத்தில் கனடா நாட்டுப்பிரஜை உட்பட இருவர் படுகாயம் (Photos)
வவுனியா - ஏ9 வீதி கொக்குவெளி இராணுவ முகாம் அருகே ஹயஸ் ரக வான் மற்றும் முச்சக்கரவண்டி நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானதில், கனடா நாட்டுப் பிரஜை உட்பட இருவர் படுகாயமடைந்த நிலையில், வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இன்று காலை 9.30மணியளவில் இடம்பெற்ற இவ்விபத்து தொடர்பில் தெரியவருகையில்,
முல்லைத்தீவிலிருந்து கொழும்பு நோக்கிச் சென்ற ஹயஸ் ரக வாகனம் ஏ9 வீதி கொக்குவெளி இராணுவ முகாம் அருகே ஓர் வாகனத்தினை முந்திச்செல்ல முற்பட்ட போது வாகனம் சாரதியின் கட்டுப்பாட்டையிழந்து எதிர்த்திசையில் வவுனியா நகரிலிருந்து நொச்சிமோட்டை நோக்கிப் பயணித்த முச்சக்கரவண்டியுடன் நேருக்கு நேர் மோதி இரு வாகனங்களும் தடம்புரண்டு விபத்துக்குள்ளானது.
இவ்விபத்தில் முச்சகக்கரவண்டி சாரதியான 43 வயதுடைய குடும்பஸ்தர் மற்றும் முச்சக்கரவண்டியில் பயணித்த கனடா நாட்டுப் பிரஜையான 55 வயதுடைய நபர் ஆகிய இருவரும் படுகாயமடைந்த நிலையில், வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதுடன், மேலதிக சிகிச்சைக்காக முச்சக்கரவண்டி சாரதி திடீர் அவசர சிகிச்சைப் பிரிவுக்கு மாற்றப்பட்டுள்ளார்.
சம்பவ இடத்திற்கு வருகை தந்த வவுனியா போக்குவரத்து பொலிஸார் விபத்து
தொடர்பிலான மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருவதுடன் ஹயஸ் ரக வாகனத்தின்
சாரதியினை பொலிஸார் கைது செய்துள்ளனர்.




களமிறக்கப்பட்ட B-52 அணு குண்டுவீச்சு விமானம்... பயணிகள் விமானங்களுக்கு அமெரிக்கா எச்சரிக்கை News Lankasri
புலம்பெயர்ந்தோருக்கு வேலை கிடையாது... பிள்ளைகளுக்கு பள்ளிகளில் இடம் கிடையாது: ஒரு திடுக் செய்தி News Lankasri
Bigg Boss: இருக்கையை தூக்கிய வீசி அரங்கத்தை விட்டு வெளியேறிய விஜய் சேதுபதி! பரபரப்பான சம்பவம் Manithan