15 இலட்சம் ரூபாய் பெறுமதியான 24 தேக்க மரக்குற்றிகளை கடத்தி சென்ற இருவர் கைது!
யாழ்.தென்மராட்சி கொடிகாமம் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட ஆசைப்பிள்ளை ஏற்றம் பகுதியில் சட்டவிரோதமான முறையில் கடத்திச் செல்லப்பட்ட மரக்குற்றிகளுடன் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இந்த கைது நடவடிக்கை கொடிகாமம் பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவலுக்கமைய இன்று (08.08.2024) காலை 9 மணியளவில் இடம்பெற்றுள்ளது.
பொலிஸ் விசாரணை
குறித்த டிப்பர் வாகனத்தினுள் மரக்குற்றிகள் அடுக்கப்பட்டு அதற்கு மேல் சிறிய கற்கல் ஏற்றப்பட்டு சூட்சுமமான முறையில் கடத்தி செல்ல முற்பட்டதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
இதன்போது, சுமார் 15 இலட்சம் ரூபாய் பெறுமதியான 24 தேக்க மரக்குற்றிகளே இவ்வாறு கடத்திச் செல்லப்பட்டுள்ளது.
இந்நிலையில், சம்பவத்துடன் தொடர்புடைய சாரதி உட்பட இருவர் கைது செய்யப்பட்டுள்ளதுடன் அவர்களை நாளை சாவகச்சேரி நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்த உள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |





விடுதலைப் போராட்டத்தை எப்படி முன்னெடுப்பது..! 2 நாட்கள் முன்

Ethirneechal: அன்பு வலையில் வீழ்ந்த தர்ஷன்... சிறையிலிருந்து வெளிவந்த ஞானம்! பரபரப்பான ப்ரொமோ Manithan

ட்ரம்பிற்கு கெட்ட செய்தி., அமெரிக்காவின் Patriot ஏவுகணைகளை தகர்த்தெறியும் ரஷ்யாவின் S-400 News Lankasri
