கந்தளாய் பகுதியில் புதையல் தோண்டிய இருவர் கைது
கந்தளாய் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட போகஸ் சந்தி பகுதியில் அமைந்துள்ள வீடொன்றினுள் இரகசியமான முறையில் புதையல் தோண்டிய இருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
இந்த சம்பவம் நேற்று(06.05.2026) மாலை இடம்பெற்றுள்ளது.
கைதானோர் தொடர்பான தகவல்
கந்தளாய், 91ஆம் கட்டை போகஸ் சந்தி பகுதியிலேயே இந்தச் சட்டவிரோத புதையல் அகழ்வு செய்யும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
குறித்த வீட்டில் புதையல் தோண்டப்படுவதாக பொலிஸாருக்குக் கிடைத்த இரகசியத் தகவலின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போது சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

அத்துடன், பொலிஸார் மேற்கொண்ட சோதனையின் போது, குறித்த வீட்டிற்குள் சுமார் 5 அடி ஆழமான குழி தோண்டப்பட்டிருந்தமை கண்டறியப்பட்டுள்ளது.
இவ்வாறு கைது செய்யப்பட்டவர்களுள் ஆண் ஒருவரும் பெண் ஒருவரும் உள்ளடங்குவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
அத்துடன், சந்தேக நபர்களிடமிருந்து அகழ்வுப் பணிகளுக்குப் பயன்படுத்தப்பட்ட உபகரணங்களும் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளன.
மேலும், கைது செய்யப்பட்ட சந்தேக நபர்களை கந்தளாய் நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.