யாழில் திருட்டு சம்பவத்துடன் தொடர்புடைய இருவர் கைது
வட்டுக்கோட்டை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட வட்டு தெற்கு, வட்டுக்கோட்டை பகுதியில் உள்ள இரு வீடுகளில் திருடிய சந்தேகத்தின் பேரில் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இதனடிப்படையில், இரு வீடுகளில் திருடிய சந்தேகத்தின் பேரில் ஒருவரையும், திருட்டு பொருட்களை வைத்திருந்த சந்தேகநபர் ஒருவரையும் வட்டுக்கோட்டை பொலிஸார் இன்று கைது செய்துள்ளனர்.
திருட்டு சம்பவங்கள்
இதற்கமைய, சகோதரியின் வீடு மற்றும் அயல் வீட்டில் உள்ள தளபாடங்களை திருடி விற்பனை செய்த 40 வயதுடைய சந்தேகநபர் ஒருவரே இவ்வாறு கைது செய்துள்ளனர்.
அத்துடன் அவர் திருடி விற்பனை செய்த பொருட்களை வாங்கி விட்டு அதனை ஒப்புக்கொள்ள மறுத்த ஒருவரையும் பொலிஸார் கைது செய்துள்ளனர்.
மேலதிக விசாரணைகளின் பின்னர் கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் இருவரையும்
நீதிமன்றில் முன்னிலைப்படுத்தவுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

உள்ளூராட்சி தேர்தலில் விழிப்படைந்த சிறுபான்மை சமூகம் 23 மணி நேரம் முன்

அதிரடியில் இறங்கிய ஆனந்தி.. உண்மையை எப்படி கண்டுபிடித்தார் பாருங்க! சிங்கப்பெண்ணே நாளைய ப்ரோமோ Cineulagam

Brain Teaser Maths: இடது மூளை ஆற்றல் கொண்டவரால் மட்டுமே புதிரை தீர்க்க முடியும் உங்களால் முடியுமா? Manithan

வெடிமருந்துகளை அகற்றும்போது ஏற்பட்ட வெடிப்பு விபத்து: ராணுவ வீரர்கள் உட்பட 13 பேர் பலி! News Lankasri
