கட்டுநாயக்க விமான நிலையத்தில் கைது செய்யப்பட்ட இரு தமிழர்கள்
வெளிநாடு செல்ல முயற்சித்த தமிழர் இருவர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளனர்.
39 மற்றும் 40 வயதுடைய இருவர் நேற்று கைது செய்யப்பட்டுள்ளதாக விமான நிலைய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
போலியான இலங்கை கடவுச்சீட்டுகளை பயன்படுத்தி நேபாளத்தின் காத்மாண்டு செல்ல முயற்சித்த வேளையில், கட்டுநாயக்க விமான நிலையத்தில் குடிவரவு திணைக்கள அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
போலி கடவுச்சீட்டு
நேபாளத்தின் காத்மாண்டுக்கு புறப்படவிருந்த இந்தியன் ஏர்லைன்ஸ் விமானமான ஏஐ-282 இல் செல்வதற்காக அவர்கள் விமான நிலையம் சென்றுள்ளனர்.

எனினும் அவர்களின் கடவுச்சீட்டில் ஏற்பட்ட சந்தேகம் காரணமாக விசாரணை மேற்கொண்ட போது அது போலியானது என அதிகாரிகள் கண்டுபிடித்துள்ளனர்.
கைது செய்யப்பட்ட இருவரையும் மேலதிக விசாரணைகளுக்காக கட்டுநாயக்க விமான நிலைய குற்றப் புலனாய்வுப் பிரிவினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.
குணசேகரன் செய்த விஷயத்தால் பெண்கள் உச்சக்கட்ட அதிர்ச்சி.. எதிர்நீச்சல் தொடர்கிறது அடுத்த வார ப்ரோமோ Cineulagam
உயிர் கொல்லும் குளிர்... மின்வெட்டால் 600,000 பேர் அவதி: ஆயிரக்கணக்கான விமானங்கள் ரத்து News Lankasri