யாழ். தென்மராட்சியில் சட்டவிரோதமாக மணல் ஏற்றிச் சென்ற இரண்டு டிப்பர்களுடன் இருவர் கைது
யாழ்.தென்மராட்சி - கொடிகாமம் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட எழுதுமட்டுவாள் பகுதியில் சட்டவிரோதமாக மணல் ஏற்றிச்சென்ற இரண்டு டிப்பர் வாகனங்கள் கொடிகாமம் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளதுடன் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
குறித்த கைது நடவடிக்கை கொடிகாமம் பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவலுக்கமைய நேற்று(13.08.2024) மேற்கொள்ளப்பட்டுள்ளது.
14 நாட்கள் விளக்கமறியல்
இதன்போது, கிளாலி பகுதியிலிருந்து நேற்று(13) அதிகாலை 4.30 மணியளவில் கொடிகாமம் நோக்கி சட்டவிரோத மணலுடன் சென்று கொண்டிருந்த டிப்பர் வாகனங்களே பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளன.

கைது செய்யப்பட்ட இரு சந்தேகநபர்களும் நேற்றையதினம்(13) சாவகச்சேரி நீதவான் நீதிமன்றத்தில் முற்படுத்தப்பட்ட நிலையில் 14 நாட்கள் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |
Bigg Boss 10: டிடிஎஃப் வாசன் ஆடிய ஆட்டம்... கோட்டை விட்ட போட்டியாளர்கள்! விஜய்சேதுபதி கூறியது என்ன? Manithan
முறையான கழிப்பறைகள் இல்லாத நாடு... விமர்சித்த கேற்றி ஸக்கரியாவுக்கு பதிலடி கொடுத்த சீனா News Lankasri