யாழில் சட்டவிரோதமாக பசுவை இறைச்சியாக்கிய இருவர் கைது
யாழ்ப்பாணம் (Jaffna) புங்குடுதீவில் பசுவைச் சட்டவிரோதமாக வெட்டி இறைச்சியாக்கிய இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
யாழ். புங்குடுதீவில் திருடர்களால் பசுவுக்குக் கடுமையான அவலம் நேர்ந்துள்ளது எனவும், இது தொடர்பில் பொலிஸார் தீவிர விசாரணை முன்னெடுக்க வேண்டும் எனவும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
புங்குடுதீவு ஜே/22 கிராம சேவகர் பிரிவுக்குட்பட்ட வரதீவுப் பகுதியில் பற்றைக்காட்டை அப்பகுதியின் அபிவிருத்தி உத்தியோகத்தர் மற்றும் கிராம சேவகர் சிறீதரன் தலைமையிலான குழுவினர் சுற்றிவளைத்தபோது, சட்டவிரோதமான முறையில் பசு ஒன்றை வெட்டி இறைச்சியாக்கிக் கொண்டிருந்த இரண்டு நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
அசம்பாவிதங்கள்
அந்தப் பகுதியில் ஏற்கனவே பல தடவைகள் கால்நடைகளைச் சட்டவிரோதமாகக் கொலை செய்தமைக்கான ஆதாரங்கள் காணப்படுகின்றன.
கடந்த ஒரு மாத காலமாக புங்குடுதீவில் சட்டவிரோத இறைச்சியாக்கும் செயற்பாடுகள் வெகுவாக குறைந்திருந்த நிலையில் மீண்டும் இவ்வாறான அசம்பாவிதங்கள் தலையெடுத்துள்ளமை குறித்து நீதித் தரப்பினரும், பொலிஸாரும் துரித கவனத்தைச் செலுத்த வேண்டும் எனவும் பொதுமக்கள் கோரியுள்ளனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |