இருவேறு இடங்களில் இருவர் படுகொலை
இருவேறு இடங்களில் இருவர் படுகொலை செய்யப்பட்டுள்ளனர் என்று பொலிஸ் தலைமையகம் இன்று வெளியிட்டுள்ள செய்தி அறிக்கையில் தெரிவித்துள்ளது.
சூரியவெவ மற்றும் ஊருபொக்க ஆகிய இடங்களிலேயே இருவர் படுகொலை செய்யப்பட்டுள்ளனர்.
சூரியவெவ - மீகஹஜதுர பிரதேசத்தில் இருவருக்கிடையில் ஏற்பட்ட முறுகலில் ஒருவர் வெட்டிப் படுகொலை செய்யப்பட்டுள்ளார்.
அம்பாந்தோட்டை பிரதேசத்தைச் சேர்ந்த 57 வயது நபரே உயிரிழந்துள்ளார்.

இருவர் படுகொலை

இதேவேளை, ஊருபொக்க - கேட்டவலகம பிரதேசத்தில் நபர் ஒருவர் பொல்லால் தாக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்டுள்ளார். கேட்டவலகம பிரதேசத்தை சேர்ந்த 51 வயது நபரே உயிரிழந்துள்ளார்.
இந்தச் சம்பவத்துடன் தொடர்புடைய 19, 30 மற்றும் 32 வயதுகளையுடைய மூவரே கைது
செய்யப்பட்டுள்ளனர்.
இது தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
உங்க படம் வந்தா தான் அது பொங்கல்... விஜய்யின் ஜனநாயகன் ரிலீஸ் தள்ளிப்போனது குறித்து பிரபலங்கள் வருத்தம் Cineulagam