அக்கரைப்பற்றில் இடம்பெற்ற வாகன விபத்தில் இருவர் உயிரிழப்பு
அக்கரைப்பற்று- அம்பாறை பிரதான வீதி, அரசடி பகுதியில் கனரக வாகனமும் மோட்டார் சைக்கிளும் நேருக்கு நேர் மோதிய விபத்தில் இரண்டு இளைஞர்கள் உயிரிழந்துள்ளனர்.
குறித்த விபத்தானது நேற்று(20) மாலை இடம்பெற்றுள்ளதாக அக்கரைப்பற்று பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
ஆலையடிவேம்பு சாயிராம் வீதியைச் சேர்ந்த 25 வயதுடைய பவிகாஸ் மற்றும் அதே வீதியைச் சேர்ந்த 24 வயதுடைய தவராசா விதுஷ்சன் ஆகிய இருவருமே இவ்வாறு உயிரிழந்துள்ளனர்.
உயிரிழப்பு
அம்பாறையல் இருந்து அக்கரைப்பற்று ஆலையடி வேம்பிலுள்ள வீடு நோக்கி மோட்டார் சைக்கிளில் இரு இளைஞர்கள் சம்பவதினமான நேற்று மாலை 3.00 மணிக்கு பிரயாணித்தனர்.
இதன்போது அரசடி பகுதியிலுள்ள வளைவில் அக்கரைப்பற்றிலிருந்து அம்பாறை நோக்கி பிரயாணித்த கனரக வாகனமும் மோட்டார் சைக்கிளும் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானதில் மோட்டார் சைக்கிளில் சென்ற ஒருவர் ஸ்தலத்திலே உயிரிழந்ததுடன் ஒருவர் படுகாயமடைந்துள்ளனர்.
இந்தநிலையில், படுகாயமடைந்தவர் அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலை அதிதீவிர சிகிச்சைப்பிரிவில் அனுமதிக்கப்பட்ட பின்னர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
மேலதிக விசாரணை
இதில் உயிரிழந்தவர்களின் சடலம் பிரேத பரிசோதனையின் பின்னர் உறவினர்களிடம் கையளிக் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதுடன் கனரக வாகன சாரதியை கைது செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
மேலும், இது தொடர்பாக மேலதிக விசாரணைகளை அக்கரைப்பற்று போக்குவரத்து பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |