இருவேறு இடங்களில் இருவர் வெட்டிப் படுகொலை
இருவேறு பகுதிகளில் இருவர் வெட்டிப் படுகொலை செய்யப்பட்டுள்ளனர் என்று பொலிஸ் ஊடகப்பிரிவு இன்று தெரிவித்துள்ளது.
கிரிபத்கொடை - பதிலியாதுடாவ பகுதியில் நபர் ஒருவர் வெட்டிக் கொலை செய்யப்பட்டுள்ளார்.
கொலையில் முடிந்த வாய்த்தர்க்கம்
இந்தச் சம்பவம் நேற்றிரவு இடம்பெற்றுள்ளது என்று பொலிஸார் தெரிவித்துள்ளனர். வத்தளையைச் சேர்ந்த 51 வயதுடைய நபரே இவ்வாறு கொலை செய்யப்பட்டுள்ளார்.
இந்தநிலையில், இந்த சம்பவத்துடன் தொடர்புடையதாக தெரிவிக்கப்படும் 33 வயதுடைய சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
இருவருக்கும் இடையில் ஏற்பட்ட வாய்த்தர்க்கமே இதற்குக் காரணம் என்று பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
பொலிஸார் விசாரணை
இதேவேளை, நேருநுவர - மகிந்தபுர பகுதியில் நேற்றிரவு வீடொன்றுக்குள் நபர் ஒருவர் வெட்டிக் கொலை செய்யப்பட்டுள்ளார்.
45 வயதுடைய நபரே இவ்வாறு கொலை செய்யப்பட்டுள்ளார்.
உயிரிழந்தவர்களின் சடலம் வைத்தியசாலையில் சிகிச்சைக்காக வைக்கப்பட்டுள்ள நிலையில், மேலதிக விசாரணைகளைப் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.





ட்ரம்ப் மனைவியிடம் பேசிக்கொண்டிருந்த இளவரசி கேட்டை முறைத்த ராணி கமீலா? இணையத்தில் வைரலாகும் செய்தி News Lankasri

மனிதகுலத்தை கட்டுப்படுத்தப்போகும் AI: 2026ஆம் ஆண்டுக்கான பாபா வங்காவின் அதிரவைக்கும் கணிப்புகள் News Lankasri
