மாத்தறையில் இடம்பெற்ற விபத்தில் இரு இளைஞர்கள் பலி!
மாத்தறை, திக்வெலை பிரதேசத்தில் இடம்பெற்ற, வாகன விபத்தில் ஆண்கள் இருவர் பரிதாபகரமாக உயிரிழந்துள்ளனர்.
இந்த சம்பவம் நேற்று(26.06.2025) இடம்பெற்றுள்ளது.
விபத்து
வீதியில் பயணித்த ஹயஸ் வான் ஒன்றும் மோட்டார் சைக்கிள் ஒன்றும் நேருக்கு நேர் மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.

மோட்டார் சைக்கிளில் பயணித்த ஆண்கள் இருவரும் உயிரிழந்துள்ளனர்.
மேற்படி இருவரும் படுகாயங்களுடன் திக்வெலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னரே உயிரிழந்துள்ளனர்.
மேலதிக விசாரணை
திக்வெலையைச் சேர்ந்த 33 வயதுடைய நபரும், கம்புறுபிட்டியவைச் சேர்ந்த 49 வயதுடைய நபருமே சம்பவத்தில் உயிரிழந்துள்ளனர்.

இருவரும் மரக்கறி வியாபாரிகள் என்று பொலிஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.
ஹயஸ் வானின் சாரதியைக் கைது செய்துள்ள பொலிஸார், விபத்து தொடர்பில் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
வெள்ளையர்கள்தான் பிரித்தானிய குடிமக்கள்... பிரித்தானியாவில் அதிகரித்துவரும் வலதுசாரிக் கொள்கைகள் News Lankasri
பல்லவன் யார் என்ற பல வருட ரகசியத்தை கூறிய நடேசன், ஷாக்கில் நிலா... அய்யனார் துணை எமோஷ்னல் எபிசோட் Cineulagam