யாழில் 20 வயது இளைஞனுக்கு நேர்ந்த அவலம்!
யாழில் தொட்டியில் நீந்திக்கொண்டிருந்த இளைஞர் ஒருவர் வலிப்பு ஏற்பட்ட நிலையில் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளார்.
குறித்த சம்பவமானது நேற்று(25) இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இதன்போது, இணுவில் பகுதியைச் சேர்ந்த சசிக்குமார் ஜீவன்சன் (வயது 20) என்ற இளைஞனே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
உயிரிழப்பு
இந்த சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில், குறித்த இளைஞருக்கு தெல்லிப்பழை பகுதியிலும் ஒரு வீடு உள்ளது. இந்நிலையில் அவர் நேற்றையதினம் தந்தையின் மரக்காலைக்கு செல்வதாக தாயிடம் கூறிவிட்டு தெல்லிப்பழையில் உள்ள வீட்டுக்கு சென்றுள்ளார்.

பின்னர் அங்கு தொட்டியினுள் தண்ணீர் நிரப்பிவிட்டு நீச்சலடித்துள்ளார். இதன்போது அவருக்கு வலிப்பு ஏற்பட்டு நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளார்.
பின்னர் மகனை காணாத நிலையில் பெற்றோர் அவரை தேடியவேளை அவரது சடலம் தண்ணீர் மிதந்தவாறு காணப்பட்டது.
மரண விசாரணை
பின்னர் அவரது சடலமானது மீட்கப்பட்டு தெல்லிப்பழை ஆதார வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டு, உடற்கூற்று பரிசோதனைகளுக்காக அங்கிருந்து யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டது.

அவரது சடலம் மீதான மரண விசாரணைகளை திடீர் மரண விசாரணை அதிகாரி நமசிவாயம் பிறேம்குமார் மேற்கொண்டார்.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
Switzerland Plus ஒப்பந்தம் மூலம் பிரித்தானியா மீண்டும் ஐரோப்பிய ஒன்றியத்தில் சேர திட்டம் News Lankasri
Bigg Boss 10: டிடிஎஃப் வாசன் ஆடிய ஆட்டம்... கோட்டை விட்ட போட்டியாளர்கள்! விஜய்சேதுபதி கூறியது என்ன? Manithan
அனிருத் - காவ்யா மாறன் திருமணத்தில் CM விஜய் மற்றும் MK ஸ்டாலின்.. பத்திரிகை வைத்த கலாநிதி மாறன் Cineulagam