முல்லைத்தீவில் கிராம சேவையாளர் உள்ளிட்ட இருவர் கைது
முல்லைத்தீவு மாவட்டத்தின் புதுக்குடியிருப்பு பிரதேசத்தில் கடமையாற்றும் கிராம சேவையாளர் உள்ளிட்ட போதைக்கு அடிமையான இருவர் புதுக்குடியிருப்பு பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
புதுக்குடியிருப்பு பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவலின்படி இன்றையதினம் (15.01.2024) கைது செய்யப்பட்டுள்ளனர்.
நீதிமன்றில் முன்னிலைப்படுத்த நடவடிக்கை
இதனையடுத்து சந்தேகநபர்கள் முல்லைத்தீவு மாவட்ட மருத்துவமனையில் மருத்துவ பரிசோதனைக்காக அனுப்பிவைக்கப்பட்ட நிலையில் அவர்களிடம் மேற்கொள்ளப்பட்ட போதை பாவனை தொடர்பான மருத்துவ பரிசோதனையின் போது குறித்த இரு நபர்களின் கிராம சேவையாளர் ஐஸ்,ஹெரோயின் போதைப்பொருள் பாவித்துள்ளமை தெரியவந்துள்ளதுடன் மற்றையநபர் ஹெரோயினுக்கு அடிமையானவர் என தெரியவந்துள்ளது.
38 வயதுடைய கிராம சேவையாளர் மற்றும் 27 வயதுடைய மற்றைய நபர் ஆகியோர் புதுக்குடியிருப்பு பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டு பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டுள்ளார்கள்.
குறித்த நபர்களை நாளை நீதிமன்றில் முன்னிலைப்படுத்தும் சட்ட நடவடிக்கையில் புதுக்குடியிருப்பு பொலிஸார் ஈடுபட்டுள்ளனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |

ஈழத் தமிழர் விடுதலைக்கு இனிச் செய்ய வேண்டியது என்ன..! 9 மணி நேரம் முன்

சீனா, அமெரிக்காவிற்கு புதிய சிக்கல்., இந்தியாவின் நட்பு நாடுடன் பிரான்ஸ் Rafale ஒப்பந்தம் News Lankasri

மீனாவை பிரிந்திருக்கும் முத்துவிற்கு வீட்டிற்கு வந்ததுமே செம ஷாக், என்ன ஆனது... சிறகடிக்க ஆசை புரொமோ Cineulagam

வீட்டிற்குள் வந்த பார்கவி, அடுத்த திட்டத்தை போடும் குணசேகரன், என்ன அது.. எதிர்நீச்சல் தொடர்கிறது பரபரப்பு புரொமோ Cineulagam
