வவுனியாவை சேர்ந்த இருவர் முல்லைத்தீவில் கைது
வவுனியாவை சேர்ந்த இருவரை முல்லைத்தீவில் வைத்து பொலிஸார் கைது செய்துள்ளனர்.
இந்த சம்பவம் நேற்று (09) இடம்பெற்றுள்ளது
சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில், வவுனியாவில் இருந்து இரு நபர்கள் கஞ்சாவினை கொள்வனவு செய்வதற்காக புதுக்குடியிருப்பு நோக்கி வந்துள்ளனர்.
இவர்களுடன் புதுக்குடியிருப்பு பகுதியில் இருந்து வியாபாரிகள் பேரம் பேசியுள்ளார்கள்
நீதிமன்றில் முன்னிலைப்படுத்தும் நடவடிக்கை
இந்நிலையில், இரண்டு கிலோ வரையான கஞ்சாவினை எடுத்துக்கொண்டு மீண்டும் வவுனியா நோக்கி சென்று கொண்டிருந்த வேளை ஒட்டுசுட்டான் பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலையடுத்து கற்சிலை மடுப்பகுதியில் வைத்து பொலிஸார் கைது செய்துள்ளனர்.

இதன்போது மீட்கப்பட்ட இரண்டு கிலோ கஞ்சா மற்றும் சந்தேக நபர்கள் இருவரையும் முல்லைத்தீவு மாவட்ட நீதிமன்றில் முன்னிலைப்படுத்தும் நடவடிக்கையில் ஒட்டுசுட்டான் பொலிஸார் ஈடுபட்டுள்ளனர்.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
ஏபி டிவில்லியர்ஸ் டக்அவுட்: 42 வயது வீரரின் சிக்ஸர்மழை..தென் ஆப்பிரிக்கா சாம்பியன்ஸ் வெற்றி News Lankasri
13 இராணுவ வீரர்களை சுட்டுக்கொன்றவருக்கு மரண தண்டனை: ஏற்றுக்கொள்ள முடியாதது - போப் லியோ News Lankasri
Bigg Boss 10: இரண்டாவது குறும்படத்தினை வெளியிட்ட விஜய் சேதுபதி... வாயடைத்துப்போன போட்டியாளர்கள் Manithan