கட்டுநாயக்க விமான நிலையத்தில் இருவர் கைது
துபாயில் (Dubai) இருந்து கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு (BIA) வருகை தந்த இருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
சட்டவிரோதமாக நாட்டிற்கு சிகரெட்டுகளை கொண்டு வந்த இரண்டு நபர்களே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.
விமான நிலைய அதிகாரிகளுக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில், நேற்று இரவு (22) விமான நிலைய வருகை முனையத்தில் இந்த கைது நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது.
சிகரெட்டுகள் பறிமுதல்
கைது செய்யப்பட்டவர்களில் குருநாகலைச் சேர்ந்த 41 வயதுடையவ சந்தேக நபரிடமிருந்து 10,000 சிகரெட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதுடன், மற்றொரு பெண் சந்தேக நபரிடமிருந்து 23,600 சிகரெட்டுகள் கைப்பற்றப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை விமான நிலைய பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |

பட்டலந்த இடிமுழக்கம் மழையைத் தராது 2 நாட்கள் முன்

மூளையில் பொருத்தப்பட்ட எலான் மஸ்க் நிறுவன சிப் - நினைப்பதன் மூலம் செயல்களை செய்யும் நபர் News Lankasri

சிவில் சர்வீஸ் தேர்வில் தமிழகத்தில் முதலிடம் பிடித்த ஐஏஎஸ் அதிகாரி.., தற்போது ஆட்சியராக நியமனம் News Lankasri

விஜய்யுடன் சந்திப்பு.. கண்களில் கண்ணீர்! அஸ்வத் மாரிமுத்து டிராகன் பற்றி தளபதி என்ன சொன்னார் பாருங்க Cineulagam
