மட்டக்களப்பில் இருவர் மின்சாரம் தாக்கி உயிரிழப்பு
மட்டக்களப்பு தலைமையக பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கறுப்பங்கேணி பகுதியில் உள்ள வீட்டின் மேல் மாடியின் கூரைப்பகுதியில் திருத்தவேலைகளில் ஈடுபட்டிருந்த இருவர் மின்சாரம் தாக்கி உயிரிழந்துள்ளனர்.
குறித்த சம்பவம் இன்று (29.11.2026) இடம்பெற்றுள்ளது.
கறுவப்பங்கேணி பகுதியில் உள்ள வீட்டின் முதலாம் மாடியில் உள்ள மேல் கூரையில் திருத்த வேலையில் வீட்டின் உரிமையாளரும் வேலையால் ஒருவரும் ஈடுபட்டுள்ளனர்.
சம்பவ இடத்திலேயே உயிரிழப்பு

இதன்போது சவல் ஒன்றை பாவித்து மண் அள்ளிக் கொட்டிக் கொண்டிருக்கும்போது வீட்டியின் மேல் கூரை பகுதியினால் சென்ற உயர் மின்அழுத்த கம்பியில் சவல் பட்ட நிலையில் இருவரும் ஸ்தலத்திலேயே உயிரிழந்துள்ளனர்.
இதில் ஒருவர் மின்சாரம் தாக்கப்படும்போது அருகில் இருந்தவர் காப்பாற்ற முற்பட்ட நிலையில் இருவரும் மின்சாரம் தாக்கி உயிரிழந்துள்ளனர்.

ஸ்தலத்திற்கு வருகைதந்த மின்சார சபையினர் இது தொடர்பான விசாரணைகளை முன்னெடுத்ததுடன் மட்டக்களப்பு தலைமையக பொலிஸாரும் அப்பகுதிக்கு வந்து விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.


