கனடாவில் இடம்பெற்ற கத்திக் குத்து தாக்குதல் - இருவர் பரிதாபமாக பலி
கனடாவில் இடம்பெற்ற கத்திக் குத்து தாக்குதலில் இருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளதாக டொராண்டோ பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
நோர்த் யோர்க்கில் வெள்ளிக்கிழமை பிற்பகல் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.
மதியம் 3:30 மணியளவில் Bathurst Street மற்றும் Ellerslie Avenue ஆகிய இடங்களில் ஏற்பட்ட தகராறில் ஆண் ஒருவர் ஒரு பெண்ணை கத்தியால் குத்தியதாக பொலிஸார் முன்னதாக தெரிவித்திருந்தனர்.
அவர்களில் இருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளதாக கூறப்படுகின்றது. சிறு காயங்களுக்கு உள்ளான மூன்றாவது நபரே இந்த சம்பவத்தின் சந்தேகநபர் என தற்போது பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
குறித்த நபர் பொலிஸ் காவலில் வைக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இந்த சம்பவம் தொடர்பில் வேறு சந்தேக நபர்கள் தேடப்படவில்லை என அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், விசாரணைக்காக அப்பகுதி மூடப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் கூறியுள்ளனர். உயிரிழந்த இரண்டு நபர்களும் சந்தேக நபர்களும் ஒருவருக்கொருவர் தெரிந்தவர்கள், எனினும், அவர்களின் உறவு அல்லது சாத்தியமான நோக்கத்தை அதிகாரிகள் விவரிக்கவில்லை.
Bathurst Street சில மணிநேரங்களுக்கு மூடப்படும் என எதிர்பார்க்கப்படுவதாக பொலிஸார் தெரிவித்தனர்.