இந்தியாவிலிருந்து சட்டவிரோத பொருட்களை கொண்டு வந்த இருவர் கைது(Photos)
இந்தியாவிலிருந்து அனுமதி பத்திரமின்றி சட்டவிரோதமாக பொருட்களை இலங்கைக்கு கொண்டு வந்த இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
சட்டவிரோதமாக கடலட்டைகளை கொண்டுவருவதாக கற்பிட்டி விஜய கடற்படையினருக்குக் கிடைக்கெப்பெற்ற இரகசியத் தகவலுக்கமைய நேற்று(18.05.2023) இரவு சின்ன அறிச்சாறு கடற்கரைப் பகுதியில் படகொன்றை முற்றுகையிட்டுள்ளனர்.
கைப்பற்றப்பட்ட பொருட்கள்
இதன்போது 193 கிலோ கிராம் உலர்ந்த கடலட்டைகள், 33600 ஷாம்போ பக்கற்றுகள், 198 பாம் போத்தல்கள் மற்றும் ஒரு குளிரூட்டி ஆகியன கைப்பற்றப்பட்டுள்ளன.
இதற்கமைய ஆனவாசல் பகுதியைச் சேர்ந்த 56 மற்றும் 28 வயதுடைய இருவர் கைது செய்யப்பட்டதாக கடற்படையினர் தெரிவித்துள்ளனர்.
மேலும் கைது செய்யப்பட்ட சந்தேகநபர்களுடன் கைப்பற்றப்பட்ட கடலட்டைகள், ஷாம்போ
பக்கற்றுகள், பாம் போத்தல்கள் மற்றும் குளிரூட்டி ஆகியன கட்டுநாயக்க சுங்கத்
திணைக்களத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக கடற்படையினர் தெரிவித்துள்ளனர்.






பஞ்சாப்பில் ஏவுகணை தாக்குதல் நடத்திய பாகிஸ்தான்? - இடைமறித்த இந்திய வான்பாதுகாப்பு அமைப்பு News Lankasri

அட்டகாசமான வசூல் வேட்டையில் சசிகுமாரின் Tourist Family பாக்ஸ் ஆபிஸ்... 7 நாளில் எவ்வளவு வசூல்? Cineulagam
