ஹெரோயினுடன் கைதான உபதவிசாளர் உள்ளிட்ட இருவரும் தொடர்ந்தும் விளக்கமறியலில்!
முல்லைத்தீவு மாவட்டத்தில் கொக்கிளாய் பொலிஸாரால் கடந்த 15.08.2026 அன்று கரைத்துறைப்பற்று பிரதேச சபையின் உப தவிசாளர் உள்ளிட்ட 5 பேர் ஹெரோயினுடன் கைதுசெய்யப்பட்டு 16ஆம் திகதி அன்று முல்லைத்தீவு மாவட்ட நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டனர்.
இவர்களில் மூவர் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளதுடன் உப தவிசாளர் உள்ளிட்ட இருவர் 19.08.2026மும் திகதி வரை விளக்கமறியலில் வைக்க மன்று உத்தவிட்டது.
சம்பவம் தொடர்பிலான விசாரணை
இந்த நிலையில் இவர்கள் மீதான வழக்கு விசாரணை கடந்த 19.08.2026 அன்று நீதிமன்றில் எடுத்துக்கொள்ளப்பட்ட போது அவர்களை 02.09.2026 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க மன்று உத்தரவிட்டது.

அத்துடன் சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை கொக்கிளாய் பொலிஸார் மேற்கொண்டுள்ளனர்.
ரணிலின் பிரித்தானிய பயணம் தொடர்பான சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி - மீண்டும் உறுதிப்படுத்திய வோல்வெர்ஹாம்டன் பல்கலைக்கழகம்
இந்து சமுத்திரம் லங்கா சமுத்திரமாக மாறுமா..! 2 நாட்கள் முன்
என் உழைப்பிற்கும், வளர்ச்சிக்கும் எனது கணவருக்கு சம்பந்தமே கிடையாது... அறந்தாங்கி நிஷா ஓபன் டாக் Cineulagam
செவ்வாய் - சனி கேந்திர யோகம்: செப்டம்பர் மாதத்தின் முதல் நாளே அதிர்ஷ்ட யோகம் பெறும் ராசிகள்! Manithan