மட்டக்களப்பில் போதைப்பொருளுடன் இருவர் கைது
மட்டக்களப்பு பொலிஸ் பிரிவிலுள்ள புதூர் மற்றும் கருவப்பங்கேணி பிரதேசத்தில் கையடக்க தொலைபேசி விற்பனை நிலைய உரிமையாளர் உட்பட இரு வியாபாரிகளை 5 கிராம் 450 மில்லிக்கிராம் ஜஸ் போதைப்பொருளுடன் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இந்த கைது சம்பவம் நேற்று(24.01.2023) இரவு இடம்பெற்றதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
பொலிஸ் புலனாய்வு பிரிவுக்கு கிடைத்த தகவல் ஒன்றின் அடிப்படையில் சுற்றுச் சூழல் மற்றும் போதை ஒழிப்பு பிரிவு பொறுப்பதிகாரி தலைமையில் இந்த கைது சம்பவம் இடம்பெற்றுள்ளது.
போதைப்பொருள் வியாபாரம்
பொலிஸ் குழுவினர் சம்பவதினமான நேற்று இரவு புதூரில் போதைப்பொருள் வியாபாரியின் வீட்டை முற்றுகையிட்டபோது போதை வியாபாரத்தில் ஈடுபட்ட வியாபாரி ஒருவரை 150 மில்லிக்கிராம் ஜஸ் போதைப்பொருளுடன் கைது செய்துள்ளனர்.
அதேவேளை கருவப்பங்கேணி பிரதேசத்தில் கையடக்க தொலைபேசி விற்பனை நிலையத்தினை நடாத்திவரும் உரிமையாளரின் வீட்டை முற்றுகையிட்ட பொலிஸார் அங்கு வியாபாரத்தில் ஈடுபட்ட கடை உரிமையாளரை 5கிராம் 300 மில்லிக்கிராம் ஜஸ் போதைப்பொருளுடன் கைது செய்துள்ளனர்.
இவ்வாறு வெவ்வேறு சம்பவங்களில் கைது செய்யப்பட்ட இருவரும் நீண்ட காலமாக போதைப்பொருள் வியாபாரத்தில் ஈடுபட்டுவரும் இளைஞர்கள் எனவும் இவர்களை நீதிமன்றில் முற்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

பதினாறாவது மே பதினெட்டு 5 நாட்கள் முன்

Super Singer: Grand Finale வொர்ட்டிங் அதிரடி மாற்றம்.. முதல் இடத்தை தட்டித்தூக்கிய போட்டியாளர் Manithan
