லுணுகலையில் கசிப்புடன் இருவர் கைது
லுணுகலையில் 35000 மில்லி லீற்றர் கசிப்பு ஏற்றிச் சென்ற முச்சக்கர வண்டியுடன் இருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக லுணுகலை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
18,35 வயதுடைய ஹொப்டன் பங்களா பகுதியைச் சேர்ந்த இருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாக லுணுகலை பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்
கிடைக்கப்பெற்ற இரகசிய தகவல்
லுணுகலை பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலுக்கு அமைய யப்பாம விகாரைக்கு அருகாமையில் முச்சக்கர வண்டியை நிறுத்தி சோதனைக்கு உட்படுத்திய போது 35000 மில்லி லீற்றர் கசிப்பு மற்றும் 2 எரிவாயு சிலிண்டர்கள், கேஸ் அடுப்பு ஒன்றும், கசிப்பு உற்பத்திக்கு பயன்படுத்தப்படும் நீர்க் குழாய் , (தகர) மற்றும் பரல்கள் இரண்டும் கைப்பற்றப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இந்நிலையில் இவர்களுக்கு எதிராக வழக்கு தொடரப்பட்டுள்ளது.
மேலும், ஹொப்டன் பங்களா பிரிவில் அதிக அளவில் கசிப்பு விற்பனையில் சிலர்
ஈடுபடுவதாகவும் இதனால் பொதுமக்கள் பாரிய அளவில் இன்னல்களுக்கு முகம் கொடுத்து
வருவதோடு, பாடசாலை மாணவர்கள் பல அசௌகரியங்களுக்கு முகம் கொடுத்து
வருவதாகவும் பொதுமக்கள் விசனம் வெளியிட்டுள்ளனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |

உள்ளூராட்சி தேர்தலை தமிழர் தரப்பு எவ்வாறு எதிர்கொள்வது..! 21 மணி நேரம் முன்

ஆடுகளம் தொடரை தொடர்ந்து சன் டிவியில் ஒளிபரப்பாக போகும் புதிய தொடர்.. நடிகர்கள், சீரியல் பெயர் இதோ Cineulagam

குட் பேட் அக்லி படத்தில் முதன் முதலில் நடிக்கவிருந்தது பிரியா வாரியர் இல்லை! வேறு யார் தெரியுமா Cineulagam
