கிளிநொச்சியில் கசிப்புடன் இரண்டு பேர் கைது
கிளிநொச்சியில் 80 போத்தல் கசிப்பை கொண்டு சென்ற இரண்டு சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
நேற்றைய தினம் (05-02-2023) கிளிநொச்சி தருமபுரம் பகுதியிலிருந்து புதுக்குடியிருப்பு பகுதிக்கு கொண்டுச் சென்றபோதே குறித்த கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
கிளிநொச்சி தரமபுரம் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட ஏ-35 வீதியின் நெத்தலியாற்றுப் பகுதியில் நேற்று அதிகாலை பொலிஸார் விசேட வீதிச் சோதனை நடவடிக்கையில் ஈடுபட்டிருந்தனர்.

நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்த நடவடிக்கை
இதன்போது, தர்மபுரத்தில் இருந்து புதுக்குடியிருப்பு பகுதிக்கு பொலித்தின் பையில் பொதி செய்யப்பட்டு, மோட்டார் சைக்கிளில் கொண்டு செல்லப்பட்ட 80 போத்தல் கசிப்பினை கைப்பற்றியுள்ளனர்.
இந்தச் சம்பவத்தில் தொடர்புடைய இரண்டு சந்தேக நபர்களையும் கைது செய்துள்ளதுடன், குறித்த குற்றச் செயலுக்காக பயன் படுத்தப்பட்ட மோட்டார் சைக்கிளையும் மீட்டுள்ளனர்.
குறித்த சந்தேக நபர்களை இன்றைய தினம் (06.02.2023) நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
உங்க படம் வந்தா தான் அது பொங்கல்... விஜய்யின் ஜனநாயகன் ரிலீஸ் தள்ளிப்போனது குறித்து பிரபலங்கள் வருத்தம் Cineulagam
இராணுவத்திற்கு என 1.5 டிரில்லியன் டொலர் ஒதுக்க திட்டமிடும் ட்ரம்ப்: கடும் அபாய நிலையிலா அமெரிக்கா? News Lankasri