பாகிஸ்தான் கடற்படையின் மூன்று கப்பல்கள் கொழும்பு வருகை
பாகிஸ்தான் கடற்படையின் இரண்டு போர்க்கப்பல்களும் ஒரு நீர்மூழ்கிக் கப்பலும் கொழும்பு துறைமுகத்திற்கு வருகை தந்துள்ளன.
பாகிஸ்தான் கடற்படையின் 'பி.என்.எஸ் தைமூர் மற்றும் 'பி.என்.எஸ் அஸ்லத்' ஆகிய இரண்டு கப்பல்களும், 'பி.என்.எஸ்/எம் ஹங்கோர்' என்ற நீர்மூழ்கிக் கப்பலுமே அவ்வாறு வருகை தந்துள்ளன.
நல்லெண்ண வருகை அடிப்படையிலும், வழங்கல் மற்றும் சேவைத் தேவைகளைப் பூர்த்தி செய்வதற்காகவும் குறித்த கப்பல்கள் மற்றும் நீர்மூழ்கி கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இருதரப்பு பாதுகாப்பு உறவு
கடற்படை மரபுகளின்படி, கொழும்பு துறைமுகத்தில் கப்பல்களையும் நீர்மூழ்கிக் கப்பலையும் இலங்கை கடற்படை வரவேற்றது.
'பி.என்.எஸ் தைமூர்' (‘PNS Taimur’)கப்பலின் கட்டளை அதிகாரியாக கேப்டன் நியாமத் சயீத் கான், 'பி.என்.எஸ் அஸ்லத்' கப்பலின் கட்டளை அதிகாரியாக கேப்டன் நாதிர் மதீன் அஃப்ரிடி, 'பி.என்.எஸ்/எம் ஹங்கோர்' நீர்மூழ்கிக் கப்பலின் கட்டளை அதிகாரியாக கேப்டன் உசைர் ஃபாரூக் ஆகியோர் செயற்படுகின்றனர்.

இந்தப் பயணத்தின் போது, கப்பல்கள் நீர்மூழ்கிக் கப்பலில் வருகை தந்துள்ள பாக்கிஸ்தானிய கடற்படைக் குழுவினர் இலங்கையில் உள்ள பல முக்கிய இடங்களைப் பார்வையிடவுள்ளதுடன், மேற்கு கடற்படைக் கட்டளைப் பகுதியின் கடற்பரப்பில் இலங்கை கடற்படைக் கப்பல்களுடன் PASSEX (Passing Exercise-கடந்து செல்லும் பயிற்சி)என்ற கடற்படைப் பயிற்சியிலும் ஈடுபட உள்ளனர்.
இந்தப் பயணம், இலங்கைக்கும் பாகிஸ்தானுக்கும் இடையே ஏற்கனவே நிலவிவரும் கடற்படை ஒத்துழைப்பையும் இருதரப்பு பாதுகாப்பு உறவுகளையும் மேலும் வலுப்படுத்த பங்களிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
சொந்த உழைப்பில் பிரம்மாண்ட வீடு கட்டியுள்ள தொகுப்பாளினி மணிமேகலை... House Warming புகைப்படங்கள் Cineulagam
பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் புகழ் ஸ்டாலின்-நிரோஷா நடிக்கும் புதிய சீரியல்... வெளிவந்த புரொமோ Cineulagam
ட்ரம்பின் அந்த முடிவு... நடுங்க வைக்கும் எச்சரிக்கை விடுத்துள்ள சீனாவின் நாஸ்ட்ராடாமஸ் News Lankasri
பிரபல துணை நடிகை தீபாவின் தந்தைக்கு நடந்த அதிர்ச்சி சம்பவம்! விரட்டி விரட்டி வெட்டிய கும்பல் Manithan