அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் இரு எம்.பிக்கள் கட்சியிலிருந்து தற்காலிகமாக நீக்கம்
கொழும்பு துறைமுக நகர விசேட பொருளாதார ஆணைக்குழு சட்டமூலத்திற்கு ஆதரவாக வாக்களித்த முன்னாள் அமைச்சர் றிசார்ட் பதியூதீனின் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் இரண்டு நாடாளுமன்ற உறுப்பினர்களை தற்காலிகமாக அந்த கட்சியின் அங்கத்துவதில் இருந்து நீக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
புத்தளம் மற்றும் அனுராதபுரம் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்களான அலி சப்றி ரஹீம் மற்றும் இஷாக் ரஹ்மான் ஆகியோர் கட்சியில் இருந்து இடைநீக்கப்பட்டுள்ளதாக அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் பிரதித் தலைவர் சட்டத்தரணி என்.எம். ஷாஹீர் தெரிவித்துள்ளார்.
கட்சியின் மத்திய செயற்குழு எடுத்த தீர்மானத்தை பின்பற்றாது நடந்துக்கொண்டதால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் கூறியுள்ளார்
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் மற்றும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சிகளின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் அரசாங்கம் ஏற்கனவே கொண்டு வந்து நிறைவேற்றிய 20வது அரசியலமைப்புத் திருத்தச் சட்டத்திற்கு ஆதரவாக வாக்களித்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.