கிண்ணியாவில் தனியார் காணியிலிருந்து இரு மோட்டார் குண்டுகள் மீட்பு!
கிண்ணியா பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஆலிம் வீதியில் அமைந்துள்ள தனியார் காணியிலிருந்து இரு மோட்டார் குண்டுகள் மீட்கப்பட்டுள்ளன.
குறித்த காணியில் வீடொன்றை நிர்மாணிப்பதற்காக அத்திவாரம் இடும் பணிகளுக்காக நேற்று (30) மாலை சுமார் 5.30 மணியளவில் நிலத்தைத் தோண்டியபோதே, இந்த இரு மோட்டார் குண்டுகளும் கண்டெடுக்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.
கிண்ணியா ஆலிம் வீதியைச் சேர்ந்த முஹம்மத் ராபிக் மொஹம்மத் ரிபாஸ் என்பவருக்குச் சொந்தமான காணியிலேயே இந்தக் குண்டுகள் கண்டெடுக்கப்பட்டுள்ளன.
குண்டுகள் மீட்பு
இது தொடர்பில் காணி உரிமையாளர் பொலிஸாருக்கு தகவல் வழங்கியதையடுத்து, சம்பவ இடத்துக்கு கிண்ணியா பொலிஸார் விரைந்து சென்று பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டனர்.
இந்நிலையில், இன்று (31) மாலை சம்பவ இடத்துக்கு வருகை தந்த திருகோணமலை – சர்தாபுர விசேட அதிரடிப்படை அணியினர், குறித்த இரு மோட்டார் குண்டுகளையும் பாதுகாப்பாக மீட்டு கிண்ணியா பொலிஸ் நிலையத்தில் ஒப்படைத்துள்ளனர்.

மீட்கப்பட்ட குண்டுகளை நீதிமன்றத்தில் ஒப்படைப்பதற்கான மேலதிக நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக கிண்ணியா பொலிஸார் தெரிவித்தனர்.
இதேவேளை, குறித்த மோட்டார் குண்டுகள் மீட்கப்பட்ட பகுதி தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, 1990ஆம் ஆண்டு காலப்பகுதியில் இந்தப் பகுதியில் இராணுவ முகாம் ஒன்று அமைந்திருந்ததாகத் தெரிவிக்கப்படுகிறது.
கோட்டாபய ராஜபக்ச நுவரவெவ குளத்தை நிரப்பி கட்டிய சொகுசு ஹோட்டல்! ஓய்வுநிலை விரிவுரையாளர் வெளிப்படுத்திய தகவல்கள்