இலங்கையிலிருந்து மேலும் இருவர் இந்தியாவில் தஞ்சம் (Photo)
யாழ்ப்பாணம் – குருநகரை சேர்ந்த இளைஞர்கள் இருவர் இலங்கையிலிருந்து இந்தியாவுக்குச் சென்று தஞ்சம் அடைந்துள்ளனர்.
இலங்கையில் கடுமையான பொருளாதார நெருக்கடி ஏற்பட்டு, அன்றாட அத்தியாவசிய பொருட்களான பால், அரிசி, காய்கறி, பெட்ரோல், டீசல் உள்ளிட்ட பொருட்களின் விலை கிடுகிடு என உயர்ந்து மக்கள் ஒரு வேளை உணவுக்கே திண்டாடி வருகின்றனர்.
இந்த நிலையில் அரசுக்கு எதிராக இலங்கையில் உள்ள பொதுமக்கள் வீதியில் இறங்கி கடுமையான போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.
இதையடுத்து கடந்த மாதத்திலிருந்து 16 குடும்பத்தைச் சேர்ந்த 75 நபர்கள் தனுஷ்கோடி பகுதிக்குத் தஞ்சமடைந்ததை அடுத்து, அவர்கள் உரிய விசாரணைக்குப் பின்னர் மண்டபம் அகதிகள் மறுவாழ்வு முகாமில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
இந்த நிலையில் இன்று காலை மேலும் இருவர் இலங்கையிலிருந்து இந்தியாவுக்குக் கடல் கடந்து வந்து தஞ்சம் அடைந்துள்ளனர்.
தமிழக பொலிஸார் அவர்களிடம் விசாரணைகளை நடாத்தி வருகின்றனர்.
புவிசார் அரசியலை புரிந்து கொள்ள தலைப்படும் தமிழ் தலைமைகள் 11 மணி நேரம் முன்
அய்யனார் துணை சீரியலில் பாண்டியின் புதிய கடையில் ஸ்பெஷல் என்ட்ரி கொடுத்த பிரபலம்... யாரு பாருங்க, வீடியோ Cineulagam
ரோஹினிக்கு வந்த அதிர்ச்சி போன் கால், பதற்றத்தில் மொத்த குடும்பத்தினர்.... சிறகடிக்க ஆசை புரொமோ Cineulagam