வவுனியாவில் மேலும் இருவர் கோவிட் தொற்றால் உயிரிழப்பு
வவுனியாவில் கோவிட் தொற்று காரணமாக இருவர் மரணமடைந்துள்ளதாகச் சுகாதார பிரிவினர் தெரிவித்துள்ளனர்.
கோவிட் தொற்றுக்குள்ளான நிலையில் வவுனியா வைத்தியசாலையின் கோவிட் விடுதியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த இருவரே சிகிச்சை பலனின்றி நேற்று உயிரிழந்துள்ளார்.
வவுனியா - காளி கோவில் பகுதியைச் சேர்ந்த 85 வயதுடைய ஆண் ஒருவரும், வவுனியா - மதவுவைத்தகுளம் பகுதியைச் சேர்ந்த 54 வயதுடைய ஆண் ஒருவருமே இவ்வாறு உயிரிழந்துள்ளனர்.
மரணமடைந்தவர்களின் சடலங்களைச் சுகாதார முறைப்படி தகனம் செய்வதற்குரிய நடவடிக்கைகளை சுகாதாரப் பிரிவினர் முன்னெடுத்துள்ளனர்.
இதேவேளை, வவுனியாவில் கோவிட் தொற்று காரணமாக மரணமடைந்தவர்களில் 89.25 வீதமானவர்கள் எந்தவொரு தடுப்பூசியையும் பெற்றுக்கொள்ளாதவர்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.
தொடர்புடைய செய்தி...
வவுனியாவில் 46 பேருக்கு கோவிட் தொற்று உறுதி

இந்திய சினிமாவில் அதிக பட்ஜெட்டில் உருவாகும் முதல் படம் ராமாயணா.. அடேங்கப்பா இத்தனை ஆயிரம் கோடியா Cineulagam

வீட்டிலேயே கார்த்திகா கழுத்தில் தாலி கட்ட சென்ற சேரன், சந்தோஷத்தில் குடும்பம், ஆனால்?- அய்யனார் துணை புரொமோ Cineulagam
