நாடு கடத்தப்பட்ட மேலும் இருவர் கைது செய்யப்பட்டனர்..!
பயங்கரவாத கருத்துக்களைப் பரப்பிய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டு கட்டாரிலிருந்து நாடு கடத்தப்பட்ட இருவர் இன்று கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் பேச்சாளர் அஜித் ரோஹண கூறியுள்ளார்.
காத்தான்குடி மட்டக்களப்பை சேர்ந்த இருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர். கடந்த வருடம் 21ம் திகதி கட்டாரிலிருந்து நாடு கடத்தப்பட்ட ஆறுபேர் கொண்ட குழுவை சேர்ந்தவர்களே இவர்கள் என பொலிஸ் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.
இலங்கையில் வஹாபிசத்தையும் பயங்கரவாதத்தையும் பரப்புவதற்காக வட்ஸ்அப்பினை பயன்படுத்திய குற்றச்சாட்டின் கீழ் இந்த குழுவை சேர்ந்த நால்வர் ஏற்கனவே கைது செய்யப்பட்டுள்ளனர்.
இந்நிலையில் இன்று இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கைது செய்யப்பட்ட ஆறு பேரும் உயிர்த்த ஞாயிறு தாக்குதலிற்கு முன்னர் ஜஹ்ரான் ஹாசிம் தொழுகையில் ஈடுபடும் வீடியோவை சமூக ஊடகங்களில் பதிவு செய்தனர் என பொலிஸ் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.
வளைகுடாப் போரில் அமெரிக்க அரசியலமைப்பின் தாக்கம்..! 11 மணி நேரம் முன்
பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 பரபரப்பான கதைக்களத்திற்கு இடையில் படப்பிடிப்பு தளத்தில் இருந்து வந்த போட்டோ... Cineulagam
12 மாதங்களின் பின் மேஷத்தில் உருவாகும் புதாதித்ய ராஜயோகம்: இந்த ராசியினருக்கு பொற்காலம் ஆரம்பம் Manithan