வவுனியாவில் மதுபோதையில் தகராறு : ஒருவர் படுகாயம்
வவுனியா (Vavuniya) - தாலிக்குளம் பகுதியில் இருவருக்கு இடையில் மது போதையில் ஏற்பட்ட தகராறு காரணமாக ஒருவர் படுகாயமடைந்துள்ளதாக பூவரசன்குளம் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இந்த சம்பவமானது தாலிக்குளம் பகுதியில் நேற்று (14.04.2024) மாலை இடம்பெற்றுள்ளது.
இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, வவுனியா - தாலிக்குளம் பகுதியை சேர்ந்த இருவருக்கு இடையில் மது போதையில் வாய்தர்க்கம் ஏற்பட்டு பின்னர் கைகலப்பாக மாறியுள்ளது.
மேலதிக விசாரணை
இதன்போது, ஒருவர் மண்வெட்டியினை எடுத்து மற்றையவர் காலின் மீது தாக்கியுள்ளார்.
இதனையடுத்து, படுகாயமடைந்த 27 வயது நபர் வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
மேலும், இது தொடர்பான மேலதிக விசாரணைகளை பூவரசன்குளம் பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |

திருமணமாகாமல் இரட்டை குழந்தைக்கு தாயான நடிகை பாவனா.. 40 வயதில் வந்த ஆசையாம்.. வைரலாகும் பதிவு! Manithan

கடலுக்கு அடியில் மிகப்பெரிய ஜாக்பாட்டை கண்டுபிடித்த இந்தியாவின் நட்பு நாடு.., ஆனால் ஒரு சிக்கல் News Lankasri

43 வயதாகியும் திருமணம் செய்துகொள்ளாமல் இருக்கும் அனுஷ்கா.. காதலனை பற்றி முதல் முறையாக கூறிய நடிகை Cineulagam
