மட்டக்களப்பு வாள் வெட்டு குழுவைச் சேர்ந்த இருவர் வாள்களுடன் கைது
மட்டக்களப்பு - ஆரையம்பதி, வம்மிக்கேணி மாரியம்மன் கோவில் முன்றலில் கடந்த மாதம் மட்டக்களப்பு வாள் வெட்டு குழுனரின் தாக்குதலில் 3 பேர் படுகாயமடைந்த சம்பவம் தொடர்பாக இருவரை வாள்களுடன் கைது செய்துள்ளதாக காத்தான்குடி பொலிசார் தெரிவித்துள்ளனர்.
இந்தக் கைது நடவடிக்கையானது நேற்று முன்தினம்(08.07.2026) இரவு இடம்பெற்றுள்ளது.
கைது செய்யப்பட்டோர்
இந்த சம்பவம் பற்றி மேலும் தெரியவருவதாவது,
ஆரையம்பதி - செல்வநகர் பகுதியைச் சேர்ந்த விஜயரியன் தலைமையில் மட்டக்களப்பு ரவுடி குழு என்ற பெயரில் இயங்கிவரும் வாள்வெட்டுக்குழு கடந்த மாதம் 29ஆம் திகதி வம்மிக்கேணி மாரியம்மன் ஆலய முன்றலில் வாள்வெட்டு தாக்குதல் மேற்கொண்டதில் 3 பேர் படுகாயமடைந்த நிலையில் மட்டு போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

தாக்குதல் நடாத்திய மட்டக்களப்பு ரவுடி வாள்வெட்டுக் குழுவினர் தப்பி ஓடி தலைமறைவாகி இருந்த நிலையில் பொலிசாருக்கு கிடைத்த தகவல் ஒன்றினையடுத்து சம்பவ தினத்தன்று இரவு காத்தான்குடி பொலிஸ் நிலைய போதை ஒழிப்பு பிரிவின் பொறுப்பதிகாரி தவராஜா றஜீவ்காந்தன் தலைமையிலான குழுவினர் அவர்களை மடக்கிப் பிடித்துள்ளதுடன் 3 வாள்களையும் மீட்டுள்ளனர்.
இதன் போது கைது செய்யப்பட்டவர் 26 வயதுடைய அலியாஸ் மாச்சி என்றழைக்கப்படும் செல்வநகரைச் சேர்ந்த மதுஷன், மற்றும் செல்வநகரைச் சேர்ந்த 19 வயதுடைய மற்றுமொரு இளைஞன் எனவும் தெரியவந்துள்ளது.
பொலிஸ் விசாரணை
குறித்த வாள்வெட்டு குழுவினர் இந்த பகுதியில் மோட்டார் சைக்கிளில் வாள்களுடன் வலம் வந்து பொது மக்களை அச்சுறுத்தி வந்துள்ளதுடன் போதைப்பொருள் கடத்தலில் ஈடுபட்டு வந்துள்ளதாகவும் பலர் குறிப்பிட்டுள்ளனர்.

அத்துடன் கடந்த 2025ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் ஆரையம்பதி மகாவித்தியாலய மைதானத்தில் விளையாடிக் கொண்டிருந்த இளைஞர்கள் மீது வாள்வெட்டுத் தாக்குதல் நடாத்திவிட்டு தப்பி ஓடியுள்ளதுடன் அந்த பகுதியைச் சோந்த 15 தொடக்கம் 28 வயது வரையிலான 10ற்கும் மேற்பட்டவர்கள் இவ்வாறு செயற்பட்டுவருவதாக பொலிசாரின் ஆரம்பகட்ட விசாரணையின் போது தெரியவந்துள்ளது.
இதன்போது கைது செய்யப்பட்டவர்களை நீதிமன்றில் முன்னிலைப்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளதாக பொலிசார் தெரிவித்துள்ளனர்.
சுக்கிரன் நட்சத்திர பெயர்ச்சி: ஜூலை 16 முதல் இந்த 4 ராசிகளுக்கு அதிர்ஷ்ட கதவு திறக்கப்போகுது! Manithan
251 வைரங்களுடன் அசத்தல் வாட்ச் அணிந்து திருமண விழாவில் கலக்கிய ஜான்வி கபூர்! விலை எவ்வளவு தெரியமா? Manithan