இலங்கையின் எதிர்காலத்திற்கு இரண்டு பெரிய தடைகள் நீக்கப்பட வேண்டும்:வெளியான தகவல்
இலங்கையின் எதிர்காலத்திற்கு கடன் மறுசீரமைப்பு பிரச்சினை மற்றும் ஜெனிவாவில் மனித உரிமைகள் அமர்வுகள் ஆகிய இரண்டு பெரிய தடைகள் நீக்கப்பட வேண்டும் என்று ஆங்கில இதழ் ஒன்று கருத்து வெளியிட்டுள்ளது.
நிதியமைச்சர்களின் கூட்டம்
பெங்களூரில் கடந்த வெள்ளிக்கிழமை நடைபெற்ற ஜி20 நிதியமைச்சர்களின் கூட்டத்தில், கடன்களை மறுசீரமைப்பதற்கான அதன் உறுதிப்பாட்டை சீனா வழங்கவில்லை.
அத்துடன் நாளை ஆரம்பமாகவுள்ள ஜெனிவா அமர்வுகள் எவ்வாறு முடிவடையும் என்பதைப் பொறுத்திருந்து பார்க்க வேண்டும்.
ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் பேரவையில் பலமுறை நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களை நிறைவேற்றுவதில் இலங்கை அரசாங்கம் மிகவும் மெதுவாக நகர்கிறது. எனினும் கடனில் இருந்து விடுபட மேற்கு நாடுகளிடம் முறையிடுகிறது.
இக்கட்டான காலங்களில் உதவி கோரி சர்வதேச நாணய நிதியத்தின் முன் இலங்கை நீண்ட காலமாக மண்டியிட்டுள்ளது.
14 தடவைகள் தப்பித்த இலங்கை
இதற்கு முன்னர் 14 தடவைகள், பொருளாதாரத்தில் சீர்திருத்தங்களை நடைமுறைப்படுத்துவதற்கு வழங்கிய உறுதிமொழிகளை நிறைவேற்றாமல் இலங்கையால் தப்பிக்க முடிந்தது, ஆனால் இந்தமுறை அது முடியாது.
இலங்கை முன்னரைப் போல அல்லாமல் வங்குரோத்து நிலையை அடைந்தமையே இதற்கான காரணமாகும்.
கடந்த காலங்களில் சர்வதேச நாணய நிதிய திட்டங்களை, அடுத்த தேர்தல்களில் பின்னடைவு ஏற்படும் என்று பயந்தே அரசாங்கங்கள் நடைமுறைப்படுத்த பயந்தன.
எனினும் தற்போதைய ஜனாதிபதிக்கு அரசியல் நகர்வு இல்லாமையால் சர்வதேச நாணய நிதியத்தின் நிபந்தனைகளை நிறைவேற்றுவதில் குறியாக இருக்கிறார்.
எவ்வாறாயினும், ஏழைகள் மற்றும் நிலையான சம்பளம் பெறும் அரச ஊழியர்களை
அரசாங்கம் கவனிக்கவேண்டும் என்று ஆங்கில இதழ் வலியுறுத்தியுள்ளது.